தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டின் நல்லாட்சிக்கு சிறந்த பாதை வாக்காளரியல்!

23 Feb 2026, 5:35 pm
நாட்டின் நல்லாட்சிக்கு சிறந்த பாதை வாக்காளரியல்!
<p><strong>நாட்டின் நல்லாட்சிக்கு சிறந்த பாதை வாக்காளரியல்!</strong></p> <p>நாமக்கல், பிப்.23- &lsquo;உண்மையான ஜனநாயகத்துக் கும், நாட்டின் நல்லாட்சிக்கும், உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும்&rsquo; என லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் தெரி வித்தார். நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி யில், &lsquo;வாக்காளரியலின் அவசியமும் கொள்கைகளும்&rsquo; என்ற தலைப்பில் கல் லூரி முதல்வர் அருண் தலைமையில் திங்களன்று கருத்தரங்கம் நடைபெற் றது. இதில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா &nbsp;உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் பேசு கையில், வாக்கு &nbsp;என்பது உச்ச அதி காரம் மற்றும் ஜனநாயக அர சாங்கத்தின் தன் மையையும், உல கப் போக்குகளை யும் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகும். &ldquo;வாக்களிப்பு&rdquo; என்ற கருத்து தேர்தல் ஜனநாயகத்தின் முதல் &nbsp;அடித்தளமாகும். உண்மையான ஜனநாயக நிறுவனங்களை நிறுவு வதற்கு எந்த விலை கொடுத்தாவது, &nbsp;ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற &nbsp;முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் &nbsp;நிராகரிக்க வேண்டும் என்பவை வாக்கா ளரியலின் முதலாம் மற்றும் இரண்டாம் &nbsp;கோட்பாடுகள். எல்லாவற்றிற்கும் &nbsp;மேலாக வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் விருப்பத்தையும், நேர்மையையும் முன்னுரிமைப் படுத்துவது ஆகிய கொள்கைகள் ஜனநாயகத்தின் அடித்தளமா கும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற் காக, வாக்காளர் அறியாமை மற்றும் &nbsp;ஊழலை தேர்தல் செயல்முறையிலி ருந்து வேரறுக்க வேண்டிய கூட்டுக் கடமை குடிமக்களுக்கு உள்ளது என் பவை வாக்காளரியலின் மூன்றாம் மற் றும் நான்காம் கோட்பாடுகள். உண்மையான ஜனநாயகத்துக்கும் நாட்டின் நல்லாட்சிக்கும் உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும். தேசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளை மேம்ப டுத்துவதற்கும் தகவலறிந்த வாக்காளர் களை உருவாக்குவதற்கும் சர்வதேச சட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை (Academic, Research and Practice) தனி கல்வித்துறையாக உருவாக்க வேண்டும். &lsquo;எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களே&rsquo; (&lsquo;voters above all else&rsquo;) என்பதே வாக்காளரிலிசத்தின் மையக் கருத்தாகும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.