விழுப்புரத்தில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையம் திறப்பு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>விழுப்புரத்தில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையம் திறப்பு </strong></p>
<p>விழுப்புரம், ஜன.22- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை அன்று திறந்து வைத்து, பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்துவதைப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்‌.</p>
