வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொது மக்கள் போராட்டம் மேற்கு வங்க மாநிலம்
1 Apr 2026, 4:02 pm
<p><strong>வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொது மக்கள் போராட்டம் மேற்கு வங்க மாநிலம் </strong></p>
<p>பஷீர்ஹாட் டில் உள்ளது ராமேஸ்வர்பூர் கிராமம். இந்த கிராம பஞ்சா யத்தின் 30ஆவது வாக்குச்சாவடியில் 125 வாக்குகள் எஸ்ஐஆர் (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) பணிக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளன. பாஜகவின் உத்தரவு மூலம் நீக்கப்பட்டுள்ளதாக இடது முன்னணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீக்கப்பட்டவை அனைத்தும் முஸ்லிம் வாக்குகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்குகள் நீக்கத்தை எதிர்த்து ராமேஸ்வர்பூர் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்தில் வாக்குகளை இழந்த முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராம மக்களும் பங்கேற்றனர். மேலும் ஹஸ்னாபாத் - லெபுகாலி சாலையை மறித்து கிராம மக்கள் மறியலிலும் ஈடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
