தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியருக்கு தவறான தகவல் என வாக்காளர்களுக்கு சம்மன்

29 Jan 2026, 5:39 pm
அரசு ஊழியருக்கு தவறான தகவல் என வாக்காளர்களுக்கு சம்மன்
<p><strong>அரசு ஊழியருக்கு தவறான தகவல் என வாக்காளர்களுக்கு சம்மன்</strong></p> <p>ஈரோடு, ஜன. 29- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் &nbsp;(SIR) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்கா ளர்களுக்கு அனுப்பி வரும் சம்மன்கள் &nbsp;பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு 1988-ம் ஆண்டு வரை 21 வயது நிரம் பியவர்களுக்கே வாக்களிக்கும் உரிமை இருந்தது. இளைஞர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அது 18 &nbsp;வயதாக குறைக்கப்பட்டது. காலப் போக்கில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC) &nbsp;அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் உயிரிழந்தோர் பெயர் நீக்கம் &nbsp;மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு &nbsp;என்பது வழக்கமான நடைமுறை யாகவே இருந்து வந்தது. தற்போது நடைபெற்று வரும் &lsquo;சிறப்பு தீவிர திருத்த&rsquo; நடவடிக்கையின் கீழ், பல வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. &nbsp;அதில், &ldquo;அரசு ஊழியருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக&rdquo;க் கூறி, அதற்காக சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எச் சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தந்தை அல்லது உறவி னர்களால் உரிமை கோரப்பட்ட பதிவுக ளில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அசல் &nbsp;ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, தேர் தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியது &nbsp;மற்றும் தன்னாட்சி அமைப்புகளை தவ றாகப் பயன்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்களிடையே சந்தேகத்தை கிளப்பி யுள்ளது. வரைவுப் பட்டியலில் பெயர் &nbsp;இருந்தும், இறுதிப் பட்டியலில் பெயரை தக்கவைக்க அலைக்கழிக்கப்படுவ தாக வாக்காளர்கள் வேதனை தெரி விக்கின்றனர். சாதாரண வாக்காளர்களைக் குற்ற வாளிகளை போல சித்தரிப்பதும், சட்ட ரீதியான தண்டனைகளை கூறி &nbsp;மிரட்டுவதும் ஜனநாயகத்திற்கு எதிரா னது என சமூக ஆர்வலர்கள் கருது கின்றனர். இந்த நடவடிக்கையால் தங்கள் வாக்குரிமை பறிபோய்விடுமோ என்ற விரக்தியில் மக்கள் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.