இடம்பெயர்ந்ததாகக் கூறி வாக்காளர்கள் நீக்கம் திண்டுக்கல் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>இடம்பெயர்ந்ததாகக் கூறி வாக்காளர்கள் நீக்கம் திண்டுக்கல் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்</strong></p>
<p>ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல் திண்டுக்கல், டிச.2- திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்கள் இடம்பெயர்ந்ததாகக் கூறி, நீக்கம் செய்யப்பட்ட தாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து ஆட்சி யர் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து, எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்கும் உரி மையை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணனிடம் கொடுத்துள்ள கடிதத்தில் குறிப் பிட்டிருப்பதாவது: எஸ்.ஐ.ஆர். எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்துவதற்கான தேதி தேர்தல் ஆணையத்தால் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் சிறப்பு முகாம்களில் கொடுக்கப்பட்ட படிவங்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வந்து சேராத பட்சத்தில், அந்த வாக்குகளை எல்லாம் இடம்பெ யர்ந்த வாக்குகள் என பதிவு செய்து இருப்ப தாக தெரிய வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் தேதிக்கு முன்னதாகவே இத்தகைய முடிவுக்கு வருவது பொருத்தமானது அல்ல. எனவே தாங்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதுடன், இடம் பெயர்ந்த வாக்குகள் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்ட வாக்கா ளர்களின் படிவங்களை டிசம்பர் 11 ஆம் தேதி வரை கொடுப்பதற்கான அவகாசத்தை வழங்கி, அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைப்ப தற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டு கிறோம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற, வாக்களிக்கும் உரிமையை எந்த ஒரு நிலையி லும் மறுப்பது சரியானதல்ல என்பதை கவனத்தில் கொண்டு, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந் தார்.</p>
