தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமா? அல்லது தீவிர சீர்குலைப்பா? - நிலோத்பல் பாசு

25 May 2026, 10:04 pm
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமா? அல்லது தீவிர சீர்குலைப்பா? - நிலோத்பல் பாசு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமா? அல்லது தீவிர சீர்குலைப்பா? - நிலோத்பல் பாசு

சிறப்புத் தீவிரத் திருத்தமா (SIR) அல்லது வாக்காளர் பட்டியல்களின் தீவிரச் சீர் குலைப்பா (ISR) - இந்தத் தேர்தல் காலத்தில் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்ட இத்தலைப்பு, தேர்தலுக்குப் பிந்தைய சூழலிலும் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்படக்கூடும்.

மரபுகளை மீறிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை

ஆரம்பத்திலிருந்தே, பீகாரில் வழக்கமான மரபுகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல், வாக்காளர் பட்டி யலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டது. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்க ளிக்கும் உரிமை பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதும், அரசமைப்புச்சட்டத்தின் 326ஆவது பிரி வின்படி, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு முழுமையாக இந்தியத் தேர்தல் ஆணை யத்தையே சார்ந்தது என்பதும் நிறுவப்பட்ட பொது வான கொள்கையாகும். வரைவுப் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவதற்கான நடைமுறை, உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து சரிபார்க்கப்பட வேண்டிய ஆட்சேபணைகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இந்தச் சிறப்பு தீவிரத் திருத்தம் என்பது வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் ஒரு புதிய நடைமுறையைப் பரிந்துரைத்தது. அதனுடன், மிகக் குறைந்த அளவிலான உள்ளடக்கத்தைக் கொண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் எழுத்துப்பூர்வ மான விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்; தவ றினால் வாக்குரிமை பறிக்கப்படும். இதில் ஆவண மற்ற குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவராகக் கருதப் பட்டுத் தாமாகவே நீக்கப்படுவர். இது அரச மைப்புச்சட்டத்தின் 326ஆவது பிரிவை முற்றிலும் மீறுவதாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்முறைகளில் தோல்வியடைந்த பிறகு, உள்துறை அமைச்சர் ஒரு தீய திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தார். ஆவணமற்ற குடிமக்களைக் குற்றவாளிகளாக்க, இத்திருத்த நடை முறையைப் பயன்படுத்தி, ‘கண்டறி, நீக்கு, நாடு கடத்து’ என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாகத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தபோது, அவர் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் அரங்கேறிய மோசடி

மேற்கு வங்கத்தில் இச்செயல்முறையைச் செயல்படுத்துவது ஆரம்பத்திலிருந்தே மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது. வரைவுத் திருத்தப் பணியின்போது, ASDD (இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், நீக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த வர்கள்) பிரிவுகளின் கீழ் 58 லட்சம் வழக்கமான நீக்கங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டன. இவற்று டன் சேர்த்து, நீதித்துறை ஆய்வின் விளைவாக, ‘தீர்ப்புக்கு உட்பட்ட நபர்கள்’ என்றுகூறி மேலும் 27 லட்சம் வாக்காளர்கள் தகுதியற்றவர்களாக அறிவிக் கப்பட்டனர்.

ஏப்ரல் 6ஆம் தேதி நிலவரப்படி, வங்கத்தின் மொத்த வாக்காளர்களில் ஏறத்தாழ 11.9 சதவீதத்தி னர், அதாவது சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் பட்டிய லிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். வாக்கெடுப்புக்கு முன்னதாக, சுமார் 34 லட்சம் மேல்முறையீடுகள் தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருந்தன. இதில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை 27 லட்சமாகும்.

இதுகுறித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜோய்மால்யா பாக்சி சில கவலைகளை எழுப்பி னார். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நபர்க ளின் மேல்முறையீடுகளைப் பரிசீலிக்க, ஒரு “வலு வான மேல்முறையீட்டு அமைப்பு” அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரை, பிற மாநில நடைமுறையிலிருந்து விலகி, ‘தர்க்கரீதியான முரண்பாடு’ (Logical Discrepancy) என்ற புதிய வகையைத் தேர்தல் ஆணையம் அறி முகப்படுத்தியுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். 2002ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்கள் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றத் தேவையில்லை என்று பீகார் வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்திருந்த நிலைப் பாட்டிலிருந்தும், தற்போதைய சூழலில் அது விலகிச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தீர்ப்பாயங்களின் தோல்வியும் மக்களின் துயரமும்

மேற்குவங்கத்தின் 19 மாவட்டங்களுக்கான நீதித்துறை தீர்ப்பாயங்கள் கொல்கத்தாவில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததால், ஏழை வாக்காளர்கள் தங்கள் தினக்கூலியைத் துறந்து தொலைதூர மாவட்டங்களிலிருந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டி யிருந்தது. இத்தீர்ப்பாய அமைப்பின் மிகப்பெரும் தோல்வியைக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உறுப்பினருமான நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம் தனது ராஜினாமா அறிக்கையில் வெளிச்சத் திற்குக் கொண்டு வந்துள்ளார்.

ஏப்ரல் 5 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தன்னால் மொத்தம் 1,777 மேல்முறையீடுகளை மட்டுமே தீர்த்துவைக்க முடிந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இத்தீர்ப்பாயங்களின் முன் நிலுவையில் உள்ள மொத்தம் 33 லட்சம் மேல்முறையீடுகளையும் முழுமை யாகத் தீர்த்துவைக்க இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்தார். எனவே, இது வாக்கா ளர் பட்டியலின் வெறும் திருத்தப் பணி அல்ல; வாக்கா ளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்குடன் தொடுக்கப்பட்ட ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ என்பது தெளிவாகிறது. சமூக மற்றும் பொருளாதாரப் படி நிலையில் பின்தங்கிய ஏழை மக்களே இத்தாக்குத லின் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி யுள்ளனர்.

மத ரீதியான உள்நோக்கமும் இந்துத்துவ சித்தாந்தமும்

பெயர்கள் நீக்கப்பட்ட முறையை மத ரீதியான மக்கள் கலவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளி லும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி யினர் வசிக்கும் இடங்களிலுமே அதிகபட்ச நீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, இது திட்டமிட்டே செய்யப்பட்ட ஒன்று என்ற ஆழமான எண்ணம் வலுப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் ‘ஊடுருவல்காரர்களால்’ நிறைந்துள்ளது என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முன்வைத்து வரும் வாதத்தின் பின்னணி யிலேயே இந்தச் சோதிக்கப்படாத மென்பொரு ளும், ‘தர்க்கரீதியான முரண்பாடு’ என்ற புதிய கருத்தாக்கமும் உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த முடிவை பாஜக தலைவர்கள் கொண்டாடி யதும், அவர்கள் விடுத்த கொடூரமான மிரட்டல்களும், இந்துத்துவத்தின் அடிப்படை சித்தாந்தக் கொள்கை களை நினைவூட்டுகின்றன.

வங்கத்தின் ஏழை விவசாயிகளிடையே இந்துக்க ளை விட முஸ்லிம்களே அதிகமாக இருப்பதற்குக் காரணம், ஜமீன்தார்களிடமிருந்தும் பூசாரிகளிடமி ருந்தும் தங்களது சுதந்திரத்தைப் பெறுவதற்காகவே அவர்கள் மதம் மாறினார்கள் என்று சுவாமி விவேகானந்தர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே, ஆர்.எஸ்.எஸ்-பாஜக தலைவர்கள் தங்களின் ‘‘ஊடுருவல்காரர்கள்’’ என்ற முட்டாள்தனமான கோட்பாட்டை நியாயப்படுத்துவதற்குப் பதிலாக, சுவாமிஜியைப் பற்றி மேலும் ஆழமாக ஆய்வு செய்த பின்னர் வங்காளத்தின் “மறுமலர்ச்சி” குறித்துப் பேசுவது அவர்களுக்கு நன்மை பயக்கலாம்.

அசாம் பாணியைப் பின்பற்றும் சூழ்ச்சி

உண்மையான குடியுரிமையை முறையாக ஆய்வு செய்யாமல் மக்களைச் சட்டவிரோதமாக்க முயன்ற அசாம் பாணியையே மேற்கு வங்கத்திலும் பாஜக கையாள முயற்சிக்கிறது. மக்களின் சில பிரிவினருக்கு ‘டி-வாக்காளர்’ என்ற ஒரு வகையை உருவாக்கி, அதை என்.ஆர்.சி செயல்முறை மற்றும் தடுப்புக் காவல் மையங்களுடன் தொடர்புபடுத்த முயன்ற அசாம் செயல்முறையின் பெரும் சரிவும், போலியான வசதிகளும் நமக்குத் தெரியும்.

இங்கு இவர்களின் நோக்கம் தெளிவாக உள்ளது. நீதித்துறையால் ஆய்வுக்கு உட்படுத்தப் படுபவர்களின் கதி என்ன என்று தீர்மானிக்கப்படு வதற்கு முன்பே, சமூக நலத் திட்டங்களின் பயனாளி களின் உரிமைகளை முடக்கப் போவதாக மாநில அரசு சூசகமாகத் தெரிவிக்கிறது. மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தின் மூலம் பெயர்கள் நீக்கப்பட்ட பெண்கள், மாநில அரசின் அன்னபூர்ணா பண்டார் திட்டத்தின் பலன்களைப் பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய, மதச் சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாம், வாழ்வாதார நெருக்கடியின் அடிப்படையில் சாதி, மதம், இனம் பாராமல் பரந்த அளவிலான மக்களை ஒன்றிணைத்து, பிரிவினை மற்றும் சீர்குலைவின் இந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம். முடிவெடுக்கப் படாத 27 லட்சம் மக்களின் பிரச்சனையே இந்த முக்கி யத்துவம் வாய்ந்த முயற்சியின் மையப் புள்ளியாக அமைந்திடும்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.