முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

3 Oct 2026, 12:06 am
திருச்சி விரைவு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்

புதுக்கோட்டை, அக். 2- வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்்களையும், தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்்களின் பெயர்களையும் சேர்க்க அனைத்துத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் இம்முகாம்கள் நடத்தப்படும். சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணியின்போது மட்டுமே படிவம்-6 உடன் இணைக்கப்பட்டஉறுதிமொழிப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களில் வாக்்காளர் பதிவு விதிகள் 1960-ன்படி உரிய படிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதியோர்களுக்கு ரேசன் பொருள் விநியோகம்

தேனி ,அக்.2-முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வருகிற அக்டோபர் 3,5 தேதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின்வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram