பெரும் விலை கொடுத்த மக்கள் உங்களை வெளியேற்றுவது உறுதி! - நேரம் முடிந்தது ஞானேஷ் ப்ரோ 15 - எஸ்.பி.ராஜேந்திரன்
28 Oct 2026, 9:16 pm

பெரும் விலை கொடுத்த மக்கள் உங்களை வெளியேற்றுவது உறுதி! - நேரம் முடிந்தது ஞானேஷ் ப்ரோ 15 - எஸ்.பி.ராஜேந்திரன்

எஸ்.ஐ.ஆர். ஒரு பட்டியல் திருத்தம் மட்டுமே, வாக்குரிமையைத் தவிர வேறு எதையும் அது பாதிக்காது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் இன்று இரு மாநிலங்களில் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது உணவுப் பொருள்களையும் நலத்திட்டங்களையும் இழப்பதாகவும் மாறி வருகிறது.

நலத்திட்டங்களுடன் இணைப்பு

2026 மே மாதம் மேற்கு வங்கத்தில் புதிதாகப் பதவியேற்ற பாஜக அரசின் அமைச்சர் அக்னிமித்ரா பால், எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்டவர்களுக்கு மாநில நலத்திட்டப் பலன்கள் கிடைக்காது என்று மே 11 அன்று அறிவித்தார். பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்திலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர்; பொது விநியோக முறையிலிருந்து “தகுதியற்ற

வர்களை” நீக்க எஸ்.ஐ.ஆருடன் இணைந்த சரிபார்ப்புக்கும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளவர்களுக்குப் பலன்கள் தொடரும் என்று பின்னர் அரசு கூறியது. மறுநாளே பீகார் பாஜக முதல்வர் சாம்ராட் சௌத்ரி, நீக்கப்பட்டவர்கள் ரேஷன் உட்பட எந்த அரசுப் பலனுக்கும்உரிமையுடையவர்கள் அல்லஎன்றும், காலப்போக்கில் அவர்களின் வங்கிக் கணக்குப் புத்தகங்களும் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். எஸ்.ஐ.ஆருக்குப் பின் 22லட்சம் ரேஷன் அட்டைகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டதாக அவர் ஏப்ரலில் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் சொன்னது என்ன?

எஸ்.ஐ.ஆர். தரவு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு மட்டுமே; அதைக் கொண்டு நலத்திட்டங்களை மறுக்கவோ குடியுரிமையைத் தீர்மானிக்கவோ முடியாது என்று உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் நலத்திட்டங்களை இழந்துள்ளதாகக் கூறும் மனுவில் அது நோட்டீஸ்அனுப்பியுள்ளது. மாநிலத்தில் 35 லட்சம் முதல் 60 லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் முடக்கப்படும் அபாயம் உள்ளதாக ஜூன்23 அன்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியும் நலத்திட்டத் தகுதியும் வெவ்வேறானவை என்றும், இரண்டையும் இணைப்பது அரசமைப்புக்குமுரணானது என்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு கூறுகிறார்.

பட்டியலுக்குப் பின்னால் உள்ள முகங்கள்

தி இந்து நாளிதழ் பீகார், மேற்கு வங்கத்தில் சந்தித்த மனிதர்களின் கதைகள் துயரத்தைச் சொல்கின்றன. ரெஜிநகரைச் சேர்ந்த 33 வயது பீடித் தொழிலாளி ஹஜேரா பீபியின் தந்தை பெயர் 1971, 1995 பட்டியல்களில் இருந்தும் 2002-இல் இல்லை; அவரது உடன்பிறந்தோர் மூவர் சேர்க்கப்பட்டபோதும் அவர் மட்டும் நீக்கப்பட்டார்; தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டப் பலன்களும் நிறுத்தப்பட்டன. மேதினிபூரைச் சேர்ந்த 24 வயது மாணவர் எஸ்.கே. ரியாஸின் குடும்பம் முழுவதும் நீக்கப்பட்டதால் உரிய ரேஷன் அளவு கிடைப்பதில்லை. கொல்கத்தா கிதிர்பூர் பாலத்தின் கீழ் வசிக்கும் குப்பை சேகரிப்பவர் ரதி தாஸ், தம் குடும்பத்தின் முதல் தலைமுறை வாக்காளர்; 2002 பட்டியலில் உறவினர் யாரையும் கண்டறிய முடியாததால் நீக்கப்பட்டார். அதன் பிறகு குடியிருப்பைக் காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீசும், அவர் வங்கதேசத்திலிருந்து வந்தவரா என்று விசாரிக்க காவல்துறைக் குழுவும் வந்தன.

ஓய்வுபெற்ற விமானப்படை விங் கமாண்டர் முகமது ஷமிம் அக்தர், தாமும் தந்தையும் 2002 பட்டியலில் இருந்தும் விசாரணையின்றி நீக்கப்பட்டதாகக் குமுறுகிறார். 2025-இல்தான் பதிவு செய்த 19 வயது ஃபாரூக் காஜி, தம் முதல் வாக்கைச் செலுத்த முடியவில்லை. 2023-இல் ஊராட்சித் தேர்தலில் வென்ற இமாமுதீன் ஷேக், பெயர் நீக்கப்பட்டதால், அடுத்த தேர்தலில்

போட்டியிடவே முடியாது. பீகாரின் துர்காவதி தேவி, தம்மைப் போன்ற ஏழைக்கு வாக்குரிமை ஒன்றே அதிகாரம், அதுவும் பறிக்கப்பட்டது என்கிறார். இப்படி ஏராளமான கதைகள்.

முடிவாக

அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 உறுதி செய்யும் வயதுவந்தோர் வாக்குரிமை, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். நீக்கப்பட்ட

வர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்கப் பல மாதங்கள் அலையும்போது, தேர்தல்கள் நடந்து முடிந்துவிடுகின்றன; ரேஷனும் உதவித்தொகையும் நின்றுவிடுகின்றன. யார் வாக்களிக்கலாம், அதை யார் தீர்மானிக்கிறார்கள், அந்த முடிவை எப்படிச் சரிபார்ப்பது என்ற இந்தக் கேள்விகள் இப்போது உச்சத்தில் நிற்கின்றன. இந்திய தேசத்தின் வீதிகளில் திரளும் மாபெரும் மக்கள் எழுச்சிகள், உங்களைத் தூக்கி எறிவது நிச்சயம், ஞானேஷ் ப்ரோ!

- எஸ்.பி.ராஜேந்திரன்

ஆதாரங்கள்: தி இந்து (“Deleted, and left in limbo”, ஷ்ரபணா சாட்டர்ஜி, சென்ஜுதி சென்குப்தா, அக். 3, 2026), தி வயர், ஸ்கிரால், திக்விண்ட், டெக்கான் ஹெரால்டு, விஓஎன் நியூஸ், தி லீஃப்லெட்(முற்றும்)