ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைக்குச் சோதனையா?
29 May 2026, 8:17 pm

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைக்குச் சோதனையா?

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்திய ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை’ மற்றும் அதன் விளைவாக நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர் கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் விவாதங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலைத் திருத்தவும், குடியுரிமை குறித்து முதற்கட்ட ஆய்வு நடத்தவும் அதிகாரம் உண்டு என சட்டப் பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தாலும், எளிய மக்களின் வாக்குரிமையைக் கேள்விக் குறி யாக்கியுள்ளது.

ஜனநாயகத்தின் முதன்மைத் தத்துவமே வாக்காளர்கள்தான் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால், 2003-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்களைச் சமர்ப் பிக்கக் கோரிய கடும் விதிமுறையால், பீகாரில் மட்டும் சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் ட்டுப, ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 6விழுக்காடு சரிந்துள்ளது. நாடு முழுவதும் இந்தத் திருத்த முறை நீட்டிக்கப்படும் போது, விடுபடுபவர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொடக்கூடும் என ஜனநாயகத்தின் மீது அக்க றையுள்ள அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வ லர்களும் எச்சரிக்கின்றனர். இது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையே மாற்றியமைக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது.

நீதிமன்றத்தின் தலையீட்டால், அடையாள ஆவணங்கள் சேர்க்கப்பட்டு சில ‘கட்டமைப்புச் சீர்திருத்தங்கள்’ செய்யப்பட்டதாகத் தீர்ப்பில் கூறப்பட்டாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. உரிய நோட்டீஸ் அல்லது முறையான விசாரணை இன்றி லட்சக்கணக்கான அடித் தட்டு மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிக முக்கியமாக, இறுதி குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியி ருந்தாலும், இந்த தற்காலிக நீக்கத்தை முன்வைத்து மாநில அரசுகள் மக்களின் ரேஷன் கார்டுகளை யும், நலத்திட்ட உதவிகளையும் ரத்து செய்து வரு வது அநீதி. ஒரு மனிதரின் குடியுரிமை இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அவரை ‘சந்தே கத்திற்குரியவராக’ கருதி வாழ்வாதாரத்தைப் பறிப்பது மனித உரிமை மீறலாகும்.

“தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்படி அதி காரம் இருந்தாலும், அவர்கள் முடிவெடுக்கும் வேகமும், தேர்தலை நடத்தும் விதமும் ஜனநாய கத்தின் அடிப்படைக்கே ஆபத்தாக அமைந்து விடக் கூடாது. வாக்குரிமை குடிமக்களின் வாழ்வு ரிமை மற்றும் அரசியல் முகவரி என்பதை நீதி மன்றமும் அரசும் உணர்ந்து, விடுபட்ட எளிய மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நியாயமான முறையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெறவேண்டுமே தவிர விருப்பு வெறுப்பு அடிப்படையிலோ அரசியல் அடிப்படையிலோ அல்ல.