தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“இடம்பெயர்ந்தவர்” என்ற முத்திரையும், இன்னும் வெளிவராத “வெளிநாட்டவர்” கணக்கும் - நேரம் முடிந்தது ஞானேஷ் ப்ரோ - 14

27 Oct 2026, 9:20 pm
“இடம்பெயர்ந்தவர்” என்ற முத்திரையும், இன்னும் வெளிவராத “வெளிநாட்டவர்” கணக்கும் - நேரம் முடிந்தது ஞானேஷ் ப்ரோ - 14

“இடம்பெயர்ந்தவர்” என்ற முத்திரையும், இன்னும் வெளிவராத “வெளிநாட்டவர்” கணக்கும் - நேரம் முடிந்தது ஞானேஷ் ப்ரோ - 14

எஸ்.ஐ.ஆர். முடிந்த அல்லது நடந்து வரும் மாநிலங்களில் சுமார் 13.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எல்லா மாநிலங்களும் முடிவதற்குள் இது 15 கோடி யைத் தொடலாம் என்று சில மதிப்பீடுகள் கூறு கின்றன. நாட்டின் வாக்களிக்கும் வயதுடைய மக்கள்தொகை சுமார் 97 முதல் 99 கோடி என்ற நிலையில், இது ஏழில் ஒருவரைத் தொடும் எண்ணிக்கை. இவர்கள் யார்?நீக்கத்தின் பெரும்பகுதி இறப்பால் அல்லதி இந்து ஆய்வின்படி, நீக்கப்பட்டவர்களில் சுமார் 2.7 கோடி பேர் இறந்தவர்கள், 1.01 கோடி பேர் இரட்டைப் பதிவுகள். எஞ்சிய ஏறத்தாழ 72 சதவீதம் பேர் “முகவரியில் இல்லாதவர், இடம்பெயர்ந்தவர், பிற” என்ற வகைக்குள் தள்ளப்பட்டவர்கள். இறந்தவர்கள் 2.8கோடி என்று பாஜக கூறுகிறது; அப்படியானால் மீதி 10 கோடிக்கு மேற்பட்டோர் எங்கே என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. மக்கள்தொகை வளரும் நாட்டில், பிறப்புகள் இறப்புகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், வாக்காளர்எண்ணிக்கை இவ்வளவு சுருங்குவது இயல்பானதல்ல.

சட்டம் என்ன சொல்கிறது?

1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20-இன்படி, ஒருவர் தம் வழக்கமான வசிப்பிடத்திலிருந்து தற்காலிகமாக வெளியே இருப்பதால் மட்டுமே அங்கு வசிப்பவர் என்ற தகுதியை இழந்துவிடுவதில்லை. ஆனால் கணக்கெடுப்பின்போது வீட்டில் இல்லாதவர்களும் நீக்கப்பட்டனர். நீக்கத்துக்கான எழுத்துப்பூர்வக் காரணங்களை ஆணை யம் வழங்கவில்லை; “இல்லாதவர்”,“இடம் பெயர்ந்தவர்” ஆகிய இரு பிரிவுகளையும் வெளிப்படையாகப் பிரித்துக் காட்டவும் இல்லை. சரிபார்ப்புக்கு முன்பேநீக்குவதும், தகுதியை நிரூபிக்கும் சுமையை அரசின் மீது அல்லாமல் குடிமக்கள் மீது சுமத்துவதும், அனைவருக்குமானவயதுவந்தோர் வாக்குரிமை என்ற அரசமைப்பு உத்தர வாதத்தையே தோற்கடிக்கிறது என்கிறது தி இந்து தலையங்கம்.

வெளிநாட்டவர் எத்தனை பேர்?

2025 ஜூன் 24 அன்று பீகார் எஸ்.ஐ.ஆரை அறிவித்தபோது ஆணையம் கூறிய காரணங்களில் ஒன்று “சட்டவிரோத வெளி

நாட்டுக் குடியேறிகள்”. ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும், 13 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். முடிந்த பிறகும், எத்தனை வெளிநாட்டவர் பட்டியலில் கண்டறியப்பட்டனர் என்ற ஒரு எண்ணைக்கூட ஆணையம் வெளியிடவில்லை என்று தி வயர் சுட்டுகிறது. குடியுரிமை சந்தேக முள்ளவர்களைத் தகுதியுள்ள அதிகார அமைப்புக்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தும், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை; அந்த அதிகார அமைப்பு எது என்பதே உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியவில்லை என்று தகவலறியும் உரிமைப் பதில்களை ஆய்வு செய்த வெங்கடேஷ் நாயக் எழுதுகிறார். சுமார் 90,000 “சந்தேக வாக்காளர்கள்” உள்ள அசாமில்கூட எஸ்.ஐ.ஆர். நடத்தப்படவில்லை.

குடியுரிமையைத் தீர்மானிப்பது யார்?

பட்டியல் தயாரிப்புக்காகக் குடியுரிமையை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று 2026 மே 27 தீர்ப்பு கூறினாலும், குடியுரிமை குறித்த இறுதி முடிவு ஒன்றிய அரசின் தகுதியுள்ள அமைப்பிடமே உள்ளது. ஆணையம் குடியுரிமையைத் தீர்மானிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு மேற்கு வங்க வழக்கில் மீண்டும் வலியுறுத்தியது. ஆனால் நடைமுறையில் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதே குடியுரிமை பற்றிய சந்தேகத்தின் முத்திரையாக மாறி வருகிறது.

சிறப்பு இயக்கம்: தீர்வா?

2026 செப்டம்பர் 26 அன்று ஆணையம் ஒரு சிறப்புச் சேர்க்கை இயக்கத்தை அறி வித்தது. ஒரு மாதத்துக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள் எஸ்.ஐ.ஆருக்கு முந்தைய பட்டியலையும் இப்போதைய பட்டியலையும் ஒப்பிட்டு, விடுபட்டவர்களை வீடுதேடிச் சென்று படிவம் 6 மூலம் சேர்க்க வேண்டும்; இரவு தங்குமிடங்கள், தொழிலாளர் குடியிருப்புகளில் முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் நீக்கப்பட்ட பழைய வாக்காளர் புதியவாக்காள ருக்கான படிவம் 6-ஐ நிரப்ப முடியாது; அப்படிச் செய்யச் சொன்னால் பொய் உறுதிமொழி என்ற குற்றம் ஆகிவிடும்அபாயம் உண்டு என்று முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எச்சரிக்கிறார். 13 கோடிப் பெயர்களுக்கு ஒரு மாதஅவகாசம் போதுமா என்பதும் கேள்வி.

- எஸ்.பி.ராஜேந்திரன்

ஆதாரங்கள்: தி இந்து (ஆய்வு, தலையங்கம் “Deep rot”, “EC switches to damage control mode”), தி வயர் (“One year of SIR”; வெங்கடேஷ் நாயக், அக். 9, 2026), நேஷனல் ஹெரால்டு, தி ஹன்ஸ் இந்தியா, விஓஎன் நியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.