தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

8 Apr 2026, 5:30 am
தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் சென்னை: 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 2.80 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடியாகவும் உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமையைப் பறிப்பதா? கோவை மண்டல நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம் சென்னை, ஏப். 7 - தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபாதை விதிகளைக் காரணம் காட்டி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடிப்படை அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் கோவை மண்டல நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

கோவை மண்டல அரசுப் போக்குவரத்து கழகப் பொது மேலாளர், தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்றும், வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் கூறி சில தொழிலாளர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உள்ளார். இந்த நடவடிக்கையானது இந்திய அரசியல் சாசனம் மற்றும் தொழிற்சங்கச் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது என சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)-இன் படி சங்கம் அமைப்பது அடிப்படை உரிமையாகும். அதேபோல், தொழிற்சங்கச் சட்டம் 1926-இன் படி, ஒரு தொழிற்சங்கம் அரசியல் காரியங்களுக்காகத் தனியாக நிதி திரட்டவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் சட்டம் அனுமதி அளித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.