ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
24 Mar 2026, 3:23 pm
<p><strong>ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>திருவல்லிபுத்தூர், மார்ச் 24- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவல கம் திருவில்லிபுத்தூர் முதல் மடவார் வளாகம் பேருந்து நிறுத்தம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தெலைவிற்கு செவ்வாய்க்கிழமை வாக் காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார். இதில் திருவில்லிபுத் தூர் வட்டார வளர்ச்சி அலு வலகப் பணியாளர்கள் மற் றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுமார் 320 பேர் கலந்து கொண்டனர். அத னைத் தொடர்ந்து வாக்கா ளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப் பட்டு விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.</p>
