மதுரை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு தீவிரம்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>மதுரை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு தீவிரம்</strong></p>
<p>மதுரை, மார்ச் 21- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர் தலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதி களில் புதுமையான மற்றும் மக்கள் பங்கேற்பு அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சோழவந்தான் தொகுதியில் ஜனநாயக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, வாக்குப் பதிவில் பொதுமக்கள் ஈடுபட உறுதிமொழி பெறப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்களிடம் பொறுப்புணர்வு அதி கரித்து, தேர்தல் நாளில் வாக்குப்பதிவு சத வீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மத்தியில் நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி, வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது. அலங்காநல்லூர் பகுதியில், பாரம்பரிய கலை வடிவங்களை பயன்படுத்தி வாக்கா ளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற் றன. சிலம்பம் மூலம் ஜனநாயக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், வாள் சண்டை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு வாக்குப்பதிவின் முக்கியத்து வம் எடுத்துரைக்கப்பட்டது. பொய்க்கால் குதிரை ஊர்வலம் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்றது. அதேபோல், வாக்காளர் இயக்கத்திற்காக பொதுப் பேரணியும் நடத்தப்பட்டது. பொதுமக்கள் நேரடியாக பங்கேற்ற மிகப்பெரிய கோலம் (ரங்கோலி) நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வாக்காளர் விழிப்புணர்வு படைப்பாற்றலுடன் பரப்பப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில், மாநக ராட்சி படிப்பகங்களில் பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டு, துண்டுப்பிரசுரங்கள் வழங் கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்டு வாக்காளர் விழிப்பு ணர்வு இயக்கம் நடத்தப்பட்டு, அவர்கள் மூலம் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு விழிப்புணர்வு பரவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வாக்காளர் உறுதிமொழி இயக்கம் நடத்தப்பட்டு, தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கல்வி மையம் சார்பில், தேர்தல் அதிகாரி தலைமையில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. உசிலம்பட்டி தொகுதியில் ஒருங்கி ணைந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாபெரும் பேரணி, பொய்க்கால் ஆட்டம், கோலம் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகள் இணைந்து நடத்தப்பட்டன. இது பொதுமக்கள் பங்கேற்பை அதிகரித்து, வாக்காளர் ஈடுபாட்டை வலுப்படுத்தியது. மதுரை மாவட்டம் முழுவதும் கிரா மப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ள டக்கிய வகையில் பல்வேறு படைப்பாற்றல் நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர் விழிப்பு ணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டது. குறிப் பாக நகர்ப்புறங்களில் காணப்படும் வாக்கா ளர் அலட்சியத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் ஈடுபாட்டை அதிகரித்து, அதிக வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளன.</p>
