இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு
20 Mar 2026, 2:55 pm
<p><strong>இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு</strong></p>
<p>இராமநாதபுரம்,மார்ச் 20- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இராமநாதபுரத்தில் மார்ச் 20 அன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட துறையின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்க ளிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்களில் வாக்காளர் விழிப்பு ணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்பு ணர்வு மேற்கொள்ளும் பணி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்கள். பின்னர் பட்டினம்காத்தன் ஊராட்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வாக்கா ளர் விழிப்புணர்வு உறுதிமொழி மேற் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்க ளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவ லர்கள் ராஜா முகம்மது, சித்ராதேவி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
