மருந்தகம், உரக்கடைகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்
27 Mar 2026, 3:15 pm
<p><strong>மருந்தகம், உரக்கடைகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்</strong> </p>
<p>புதுச்சேரி, மார்ச் 27- மருந்தகங்கள், உரக்கடைகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை புதுச்சேரி தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார். எதிர் வரும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மருந்தகங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வருகை தரும் விவசாயிகளை சென்றடையும் வண்ணம் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய பதாகைகள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் வெளியீட்டு விழா, பேட்டை சத்திரத்தில் உள்ள புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. “நூறு சதவிகித வாக்குப்பதிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப்பதிவு” போன்ற கருத்துக்கள் அடங்கிய போஸ்டர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டார். இவ்வெளியீட்டு விழாவில், புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அருளானந்தம், ரமேஷ், முருகானந்தம், மகேஸ்வரன், உரக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற முன் வந்ததற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி பாராட்டினார்</p>
