வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ வாகனப் பேரணி
27 Mar 2026, 3:15 pm
<p><strong>வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ வாகனப் பேரணி</strong></p>
<p>இராமநாதபுரம்,மார்ச் 27- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026-ஐ முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மார்ச் 27 அன்று வட்டார போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறை இணைந்து ஆட்டோ மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து வாகனப் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்க ளை வழங்கியதுடன், செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆட்டோ விலும் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்க ளில் பொதுமக்கள் பார்த்து அறிந்திடும் வண்ணம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்களை ஒட்டி ஆட்டோ வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.</p>
