தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு

10 Apr 2026, 5:30 am
திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு

திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு

சென்னை, ஏப். 9: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜ், 12-ஆவது வார்டு இரோசையியம்மன் கோவில் அருகில் இருந்து விடியற்காலை (ஏப். 9) தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பின்னர் 12-ஆவது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பும், பெண்கள் வெற்றித் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் எல்.சுந்தரராஜ் பேசுகையில், காலப்படைப் பகுதியில் புதிய நூலகம் மற்றும் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியில் ஏராளமான திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.