தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதத்தின் பெயரால் வாக்கு வேட்டை! பாஜக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!

25 Mar 2026, 5:29 pm
மதத்தின் பெயரால் வாக்கு வேட்டை! பாஜக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!
<p><strong>மதத்தின் பெயரால் வாக்கு வேட்டை! பாஜக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!</strong></p> <p>வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற மக்கள் நலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசத் திராணியற்ற பாஜக, எப்போதும் போலத் தனது ஒற்றை அஸ்திரமான &lsquo;மதவாதத்தை&rsquo; கேரளத்தில் கையில் எடுத்து மூக்குடைபட்டுள்ளது. &ldquo;இந்து எம்.எல்.ஏ&rdquo; வேண்டும்! கேரள பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரும், குருவாயூர் தொகுதி வேட்பாளருமான பி. கோபாலகிருஷ்ணன், பிரச்சாரத்தின் போது மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். &ldquo;குருவாயூர் தொகுதிக்கு ஏன் கடந்த 50 ஆண்டுகளாக &nbsp;ஒரு &lsquo;இந்து&rsquo; சட்டமன்ற உறுப்பினர் கிடைக்கவில்லை? குருவாயூர் ஒரு சர்வதேச ஆன்மீகத் தலம், அதன் மண்ணை நாம் மீட்டெடுக்க வேண்டும்&rdquo; எனப் பேசிப் பிரிவினையை ஏற்படுத்த முயன்றுள்ளார். சமூக வலைதளங்களில் இவரது இந்தப் பேச்சு வீடியோவாக வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாயும் &lsquo;தகுதி நீக்கம்&rsquo; மதத்தின் பெயரால் வாக்குக் கேட்பது தேர்தல் நடத்தை விதிகளின்படி கடுமையான குற்றமாகும். இதையடுத்து, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி டாக்டர் ரத்தன் யு கேல்கரின் உத்தரவின் பேரில், திருச்சூர் மாவட்ட ஆட்சியர், கோபாலகிருஷ்ணன் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (3)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். குருவாயூர் கோவில் காவல் நிலையத்தில் இவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தேர்தல் ரத்து செய்யப்படலாம் அல்லது வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது! வழக்கமான சப்பைக்கட்டு! தன் மீதான வழக்கைக் கண்டு அஞ்சாதது போலப் பாசாங்கு செய்யும் கோபாலகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் &ldquo;இதில் என்ன மதவாதம் இருக்கிறது? முஸ்லிம் லீக் தலைவர் பேசும்போது மட்டும் மதச்சார்பற்றவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?&rdquo; எனத் தனது வழக்கமான சப்பைக்கட்டையும், திசைதிருப்பும் உத்தியையும் கையாண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.