மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய எனக்கு வாக்களியுங்கள்
8 Apr 2026, 5:30 am

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய எனக்கு வாக்களியுங்கள்

கீழ்ப்பெண்ணாத்தூரில் கு. பிச்சாண்ட வாக்கு சேகரிப்பு. திருவண்ணாமலை, ஏப். 7: கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் கு. பிச்சாண்ட தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மங்கலம், மணிகண்டன், கீழ்பாலாநந்தல், மங்கலம் பாரதி நகர், வேடந்தவாடி, காட்டுமலையூர், எறும்பூர், எறும்பூர் காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளர் கு. பிச்சாண்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகம் ஒளி பெற்றுள்ளது. சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், மின்சார வசதி என அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எனவே, இப்பணியைத் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.