நலத்திட்டங்கள் தொடர திமுகவிற்கு வாக்களியுங்கள்!
10 Apr 2026, 5:30 am

நலத்திட்டங்கள் தொடர திமுகவிற்கு வாக்களியுங்கள்!

உடுமலை, ஏப். 9- மகளிருக்கான திட்டங் கள் தொடர, உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என மடத்துக்குளம் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ் ணன் வாக்கு சேகரிப்பு பிரச் சாரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மடத்துக்குளம் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன், உடுமலை ஒன்றிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் வியா ழனன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். சர்க்கார்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங் கிய அவர், ஜெ.என்.பாளையம், கொழுமம் பம், ஏரிப்பாளையம் மற்றும் இணைப்புட்ட உள் ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசு கையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற உண்மையான திட்டங்கள் தங்குதடையின்றி தொடர வேண்டும். குறிப் பாக, பெண்களின் நலன் காக்கும் விடியல் பய ணத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள் ளிட்ட நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வும், புதிய திட்டங்கள் மக்களைச் சென்றடைய வும் திமுக வேட்பாளரான எனக்கு 'உதய சூரியன்' சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார்.

இந்நிகழ்வில், பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக ஒன் றியச் செயலாளர் செழியன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.மதுசூதனன், கனகராஜ், ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகி கள் திரளானோர் பங்கேற்றனர்.