தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க சிபிஎம் வேட்பாளரை தேர்ந்தெடுப்பீர்! திருவொற்றியூரில் ஆ.ராசா பேச்சு

10 Apr 2026, 5:30 am
தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க சிபிஎம் வேட்பாளரை தேர்ந்தெடுப்பீர்! திருவொற்றியூரில் ஆ.ராசா பேச்சு

தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க சிபிஎம் வேட்பாளரை தேர்ந்தெடுப்பீர்!

திருவொற்றியூரில் ஆ.ராசா பேச்சு

சென்னை, ஏப். 9- தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பாதுகாக்க அறிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று திருவொற்றியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஆ.ராசா கேட்டுக் கொண்டார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எஸ்.சுந்தர்ராஜை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தோழர் எஸ்.சுந்தர்ராஜ் நமதுடைய அன்புத் தலைவர், தமிழ் நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற அந்த மாமனிதர் உங்களிடத்திலே ஒப்படைத்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், அன்புச் சுவர், தவப்புதல்வன், தாயுமானவர் என எண்ணற்ற திட்டங்களை நாம் பட்டியலிட்டு மக்களிடத்திலே வாக்கு கேட்கின்றோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும், அவரோடு இருக்கின்றவர்களாக இருந்தாலும் திட்டங்களைச் சொல்லாமல், செய்த சாதனைகளைச் சொல்லாமல், செய்யப் போகும் சாதனைகளை கூட சொல்லாமல் ஏதேதோ அரசியலுக்காக பல்வேறு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கான தேர்தல் மட்டுமல்ல. தமிழர்களின் மொழியை, கலாச்சாரத்தை, பண்பாட்டு அடையாளத்தை, நமக்கு என்று இருக்கின்ற எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு, மதத்தின் பெயரால் இங்கே ஒரு காட்டாட்சியைக் கொண்டு வந்து, ‘ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே மொழி’ என எல்லாம் ஒற்றைத் தன்மை என்று சொல்லி இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கின்ற மோடி, அமித் ஷா கும்பலின் ஆட்சிக்கு முடிவு கட்டிவதற்கும், அவர்களை தமிழ்நாட்டில் உள்ளே விடாமல் தடுப்பதற்குமான தேர்தல்.

இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றி, இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றி, தமிழ்நாட்டை, தமிழர்களை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்றுவதற்கு இந்தத் தேர்தலில் உங்கள் வாக்குகளை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் தோழர் சுந்தர்ராஜுக்கு அறிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று ஆ.ராசா கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.