தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத்திலும் போராட இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!

5 Oct 2026, 10:46 pm
சட்டமன்றத்திலும் போராட இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!

சட்டமன்றத்திலும் போராட இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!

சென்னை, அக். 5 –செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா. சுகந்தியை ஆதரித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி கருங்குழி பேரூராட்சிப் பகுதிகளில் அக்டோபர் 4 அன்று இறுதி கட்டத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.மக்கள் வாழ்வாதாரத்திற்கு எதிரான கொள்கைகள்அப்போது திறந்த வாகனத்தில் மக்களிடையே உரையாற்றிய உ. வாசுகி, “களத்திலும் சட்டமன்றத்திலும் தமிழகமக்களுக்காகச் செங்கொடி ஏந்தி உறுதியோடு போராட சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

மதுராந்தகம் தனித் தீவு கிடையாது; தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஏற்படும் பிரச்சினைகளின் தாக்கம் இங்கிருக்கும் உழைக்கும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. சாதாரண மக்களின் வாழ்வாதாரத் தேவைகளான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின்விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதற்கு ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே முழுக்காரணமாகும்.இன்று அரசு வேலை என்பது எளிய மக்களின் கனவாகவும், சமூகப் பாதுகாப்பு என்பது வெறும் கோரிக்கையாக மட்டுமே மாறியுள்ளது. இதற்கு எதிரான தொடர் போராட்டங்களை இடதுசாரிகள் மட்டுமே முன்னெடுத்து வருகிறோம். ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்தால் மட்டுமே விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும்; ஆனால், சாதாரண மக்கள் மீது மறைமுக வரியைச் சுமத்திவிட்டு அந்தப் பணத்தைப் பெருமுதலாளிகளுக்கு ஒன்றிய அரசு தாரைவார்த்து வருகிறது” என்றார்.

காலிப் பணியிடங்களை நிரப்ப…தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றியமற்றும் மாநில அரசுப் பணிகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், நிரந்தரப் பணிகளுக்கு மாற்றாக அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையைக் கொண்டுவரும் அரசுகளின்கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.

தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் மற்றும் தலித், பழங்குடியின மக்கள் மீது தொடரும் வன்முறைகள் குறித்து மற்ற கட்சிகள் பெயரளவிற்கு அறிக்கைவெளியிட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதியுடன் போராடும் ஒரே இயக்கம் சிபிஎம் ஆகும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணக் களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பா. சுகந்தியைத் தேர்ந்தெடுத்து, சட்டமன்றத்தில் உங்களுக்காகக் குரல் கொடுக்க வாக்களியுங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரச்சாரத்தின்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். குணசேகரன், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் டி. சந்துரு, கருங்குழி கிளைச் செயலாளர் ஜி. ரமேஷ் மற்றும் மு. ஜோதிபாசு, என். ஜோதிபாசு, பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.