தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?

9 Jan 2026, 3:41 pm
நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?
<p><strong>நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?</strong></p> <p>உடுமலை, ஜன.9- விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வரும் தேங்காய் மட்டை நார் தொழிற்சாலைகள் மீது &nbsp;நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் வெள்ளியன்று மடத்துக் குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மடத்துக்குளம் தாலுகாவில் விவசாய நிலங்களையும், நிலத்தடி நீரை பாதிக் கும் வகையில் செயல்படும் தென்னை நார் &nbsp;தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 5 ஆம் தேதி திங் கட்கிழமை உடுமலை வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரி யம், விவசாயிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சட்ட &nbsp;விரோதமாக செயல்படும் நார் தொழிற்சாலை கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டது. அதன்படி முடிவை நடைமுறைப்படுத்தக் கோரி வெள்ளியன்று மடத்துக்குளம் வட்டாட் சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத் துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட் டுள்ளது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது, மடத் துக்குளம் வட்டத்தில் அமராவதியும், பி.ஏ.பி &nbsp;யும் பிரதான பாசனங்களாக உள்ளன. இங்கு &nbsp;விவசாயம் முதன்மையான தொழிலாக உள் ளது. இந்நிலையில் மைவாடி, சோழமாதேவி, &nbsp;ஜோத்தம்பட்டி, வேடபட்டி, காரத்தொழுவு, துங்காவி, &nbsp;பாப்பான்குளம் கிராமங்களில் தேங்காய் மட்டை &nbsp;நார் &nbsp;தொழிற்சாலைகள் எந் தவிதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யாமல் விதிகளுக்கு புறம்பாக &nbsp;இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைக ளால் பிரதான ஆயக்கட்டு பகுதிகளில் நிலத் தடி நீர் மற்றும் காற்று மாசுபடுகிறது. அருகா மையில் உள்ள விளை நிலங்களில் தூசு பர வுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் பல &nbsp;கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கால்நடைகள் கூட குடிக்க முடியாத அள வில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. நிலத்தடி &nbsp;நீர் பாதிக்கப்படுவதால் காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டங் கள் நடைபெற்றன. இதன் விளைவாக &nbsp;கடந்த &nbsp;திங்கட்கிழமை &nbsp;கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட மாசு கட் டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கலந்து &nbsp;கொண்டு மையவாடியில் 6 தொழிற்சாலைக ளின் இயக்கத்தை நிறுத்தி உள்ளனர். இதர &nbsp;கிராமங்களில் உள்ளாட்சி துறை மூலம் நட வடிக்கைகள் எடுப்பதாக ஒப்பந்தம் ஏற்பட் டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களை பாழ் படுத்தும் வகையில் விதிகளை மீறி இயங் கும் நார் தொழிற்சாலைகள் மீதும், கழிவு களை விவசாய நிலங்களில் கொட்டி அள விற்கு அதிகமாக தண்ணீர் அடித்து அருகில் &nbsp;இருக்கும் விவசாய நிலங்களை பாழ்படுத் தும் தொழிற்சாலைகள் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.