முந்தய பக்கம்

சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு

12 Apr 2026, 5:30 am
சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு
<p><strong>சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரிப்பு</strong></p><p>திருத்துறைப்பூண்டியில் பிருந்தா காரத் பிரச்சாரம். திருத்துறைப்பூண்டி, ஏப். 11 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ வேட்பாளர் க. மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.</p><p>திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.என். முருகானந்தம், பி. கந்தசாமி, கே.டி. தமிழ்மணி, கே.ஜி. ரகுராமன், கே.பி. ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பத்மாவதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் அ. பாஸ்கர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கேசவராஜ், மாநிலக் குழு உலகநாதன், சிபிஎம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம். முருகதாஸ், நகரச் செயலாளர் கே. கோபு, முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் புனிதாசாமி திருத்துறைப்பூண்டி நகரமன்ற உறுப்பினர் கவிதா பாண்டியன், துணைத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram