தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?

9 Jan 2026, 3:41 pm
நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?
<p><strong>நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு தாராபுரத்தில் வாக்கு?</strong></p> <p>திருப்பூர், ஜன.9 - தாராபுரம் சட்டமன்றத் தொகுதி சிறப்பு தீவிர திருத்த &nbsp;வரைவு வாக்காளர் பட்டியலில், நேபாள நாட்டைச் சேர்ந்தோர் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி விளக்கம் அளிக்க &nbsp;வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. &nbsp;திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் &nbsp;சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணிகள் மேற் பார்வையாளர் குல்தீப் நாராயணன் பங்கேற்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நந்தகோ பால் பேசுகையில், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மூவர் மற்றும் பீகார் மாநி லத்தைச் சேர்ந்த நால்வர் சேர்க்கப்பட்டுள்ளதாக தாராபு ரத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் &nbsp;அளிக்க வேண்டும் என்றார். அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி யின் டி.ஜெயபால் பேசுகையில், ஒரே குடும்பத்தை &nbsp;சேர்ந்த வாக்காளர்கள் வெவ்வேறு வாக்குச்சாவடி களில் வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லாமல், தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துள்ளது. அவர்களின் வாரிசுகள் &nbsp;புதிய வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள மனு அளிக் கும்போது, பெற்றோர்களின் கடந்த எஸ்.ஐ.ஆர் விவ ரங்கள் கேட்கப்படுகிறது. இதுகுறித்தும் விளக்கம் அளிக்க &nbsp;வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறையும் அரசியல் &nbsp;கட்சியினர் அளிக்கும் புகார்கள் தீர்வு காணப்படுகிறதா? என்பது தெரியவில்லை என்றார். இதற்கு மேற்பார்வையாளர் குல்தீப் நாராயணன் பதில் &nbsp;அளிக்கையில், &nbsp;பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இந்தி யராக இருந்தால் நேபாள நாட்டைச் சேர்ந்தவருக்கு வாக்கு ரிமை வழங்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் இது குறித்து &nbsp;விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடும்போது ஒரே குடும் பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வாக்குச்சாவடியின் கீழ் வரு வார்கள். அதேபோல் அரசியல் கட்சியினர் கூறியுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அ.சிகாமணி உடன் பங்கேற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.