வெள்ளகோவிலில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி
20 Jan 2026, 2:46 pm
<p><strong>வெள்ளகோவிலில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி</strong></p>
<p>திருப்பூர், ஜன. 20 - வெள்ளகோவில் சிவநாதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்க விளை யாட்டுக் கழகம் சார்பில் பள்ளி அளவி லான மாணவர்களுக்கு வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. ஜனவரி 18 ஞாயிறன்று நடைபெற்ற இந்த வாலிபால் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கெடுத்தனர். முதல் பரி சினை வி.வி.சி அணியினர் வென்றனர். அவர்களுக்கு பரிசுக் கோப்பையும், ரூ.3 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங் கப்பட்டது. இரண்டாம் பரிசினை தாண் டாம்பாளையம் அரசு பள்ளி மாணவர் கள் வென்றனர். அவர்களுக்கு கோப் பையுடன், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசினை ரவி ஃபிரண்ட்ஸ் அணியினர் பெற்ற னர். அவர்களுக்கு கோப்பையுடன், ரூ. ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட் டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிவநாதபுரம் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் வாலி பர் சங்க முன்னாள் தாலுகா செயலாளர் ரமேஷ், முன்னாள் தாலுகா தலைவர் லோகேஸ்வரன், கிளை நிர்வாகிகள் கவின், தினேஷ் ராம், ரோகித் குமார், ஜீவானந்தம், பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொங்கல் விளையாட்டு விழா முன்னதாக வெள்ளிக்கிழமை தைப் பொங்கல், திருவள்ளுவர் தின விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாலிபர் சங்கம் சார்பில் இங்கு நடத் தப்பட்டது. மொழிப் போராட்ட தியாகி எஸ்.என்.பழனிசாமி கொடி ஏற்றி வைத் தார். விளையாட்டுப் போட்டிகளை நகர் மன்ற உறுப்பினர் கே.நளினி கார்த்திகே யன் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க தாலுகா ஒருங்கிணைப்பாளர் எஸ்.தங்க வேல், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் இரா.செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ராதாமணி முரு கன், எஸ்.சொர்ணாம்பிகை கிளாசிக் செல்வம், வி.விஜயலட்சுமி வாசுதே வன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது சிறப் புரை ஆற்றினார். சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்பகுதி மக்கள் ஐநூ றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.</p>
