தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் வஉசி துறைமுகம் முதலிடம்

30 Jan 2026, 2:24 pm
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் வஉசி துறைமுகம் முதலிடம்
<p><strong>பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் வஉசி துறைமுகம் முதலிடம்</strong></p> <p>தூத்துக்குடி,ஜன.30- பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் துறை முகமாக தூத்துக்குடி வ.உ.சிதம் பரனார் துறைமுகம் திகழ்கிறது என்று துறைமுக ஆணைத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பள்ளி மைதானத்தில் இந்திய திருநாட்டின் 77-ஆவது குடியரசு தின &nbsp;விழா கொண்டாடப்பட்டது. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி &nbsp;வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் துறைமுகத் தீய ணைப்புப் படை வீரர்கள், துறைமுகப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றிய போது, அரசிய லமைப்பை ஏற்றுக்கொண்டதையும், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக உருவெடுத்ததை யும் நினைவுகூரும் வகையில் ஜனவரி 26 இன் &nbsp;வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தை வடிவமைப்ப தில் தேசிய தலைவர்களின் தொலை நோக்குப் பார்வை மற்றும் உறுதியான தலைமைத்துவத்திற்காக நாட்டின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் துறைமுகத்தின் வலி மையான செயல்திறனை எடுத்துரைத் தார், நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 2025 வரையிலான 31.97 மில்லியன் டன் சரக்குகளை துறைமுகம் கையாண்டுள் ளது. &nbsp;2025&ndash;26 நிதியாண்டில் 6,42,454 டிஇயு சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளது. இது, 2024&ndash;25 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 5,81,557 டிஇயு சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 10.47 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. &nbsp;வெளித் துறைமுக திட்டத்திற்கு ஒப்பந்தங்களைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அமையவிற்கும் இரண்டு சரக்கு பெட்டக முனையங்களில் 1000 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் தளம், 18 மீட்டர் &nbsp;மிதவை ஆழம் மற்றும் 4 மில்லியன் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையா ளும் திறன் கொண்டதாக இருக்கும். &nbsp;நிலைத்த வளர்ச்சி மற்றும் எதிர்கால மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதி யாக, துறைமுகம் பல முக்கிய பசுமைத் திட்டங்களை தொடங்கியுள்ளது. இதில், மாதிரி திட்டத்தின் மூலம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்கிறது. மேலும் 2 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் மற்றும் 6 மெகாவாட் காற்றாலை மின்திட்டங் களை அமல்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். துறைமுகத்தின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும் நவீனமய மாதலை ஊக்குவிக்கவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாக மின்சாரத்தில் இயங்கும் சரக்குகளை கையாளும் இயந்திரத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய உடற்பயிற்சி மையம் மற்றும் துறை முக மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை &nbsp;பணி நிலையத்தினையும் தொடங்கி வைத்தார். &nbsp;நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். &nbsp;துறைமுக பள்ளி மாணவர்களின் &nbsp;கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.