தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

.உ.சி. துறைமுக ஆணைய கோப்பை மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம் முதல் போட்டியில் தூத்துக்குடி வெற்றி

10 May 2026, 10:12 pm
.உ.சி. துறைமுக ஆணைய கோப்பை மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம்  முதல் போட்டியில் தூத்துக்குடி வெற்றி
<p><strong>வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பை மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம் முதல் போட்டியில் தூத்துக்குடி வெற்றி</strong></p><p>தூத்துக்குடி, மே 10- ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில், வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவில்பட்டியில் சனிக்கிழமையன்று தொடங்கின. கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரரும், ஒலிம்பியனுமான திருமால்வளவன் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 35 மாவட்ட அணிகள் இப்போட்டியில் களமிறங்கியுள்ளன. தூத்துக்குடி வெற்றி முதல் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை எதிர்கொண்ட தூத்துக்குடி அணி, 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற லீக் ஆட்டங்களில் திருநெல்வேலி, திருவள்ளூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இப்போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, புவனேசுவரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளின் இயக்குநராக அனில் மற்றும் நடுவர்களின் மேலாளராக சரவணகுமார் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஹாக்கித் திருவிழா வரும் மே 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.