தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசிக வேட்பாளர் எழில் கரோலின் சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்

5 Apr 2026, 6:26 pm
விசிக வேட்பாளர் எழில் கரோலின்  சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்
<p><strong>விசிக வேட்பாளர் எழில் கரோலின் &nbsp;சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்</strong></p> <p>ராணிப்பேட்டை, ஏப். 5 &ndash; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி வேட்பாளராக வழக்கறிஞர் எழில் கரோலின் களம் இறங்கியுள்ளார். &lsquo;பானை&rsquo; சின்னத்தில் போட்டியிடும் அவர், தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அரக்கோணத்தில் உள்ள சிபிஎம் தாலுகா குழு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, கூட்டணி கட்சித் தலை வர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அங்கிருந்த தலைவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்தச் சந்திப்பின் போது விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சந்துரு, முன்னாள் மாவட்ட செயலாளர் கௌதம், வழக்கறிஞர்கள் தமிழ்மாறன், பாரிவேந்தன் ஆகியோர் வேட்பாளரு டன் உடனிருந்தனர். சிபிஎம் தரப்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். காசிநாதன், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏபிஎம். சீனிவாசன், அரக்கோணம் - நெமிலி தாலுகா குழு செயலாளர் ஆர். வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளரை வரவேற்றனர். மேலும், மூத்த தோழர்கள் சி. துரைராஜ், சுந்தரமூர்த்தி, வி. சிவகுமார், வெண்ணிலா, த. ஞானமுருகன், தென்னரசு, பலராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளில் சிபிஎம் தோழர்களின் முழுமையான ஒத்துழைப்பை கோரிய வேட்பாளர் எழில் கரோலினுக்கு, வெற்றிக்கான வாழ்த்துகளை இடதுசாரி தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.