தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகப் பங்கு விற்பனைச் சூழ்ச்சி

3 Jul 2026, 9:16 pm
விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகப் பங்கு விற்பனைச் சூழ்ச்சி

விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகப் பங்கு விற்பனைச் சூழ்ச்சி

கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மாபெரும் மைல் கல்லாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் அரும்பெரும் சாதனைத் திட்ட மாகவும் உருவெடுத்த விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகம், இன்று கார்ப்பரேட் லாப வெறிக்காகச் சீர்குலைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இத்துறைமுகத்தை இயக்கி வரும் அதானி குழுமம் (APSEZ), தனது 49 சதவீதப் பங்குகளை சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட மெடிட்டரேனியன் ஷிப்பிங் நிறுவ னத்திற்கு (MSC) தன்னிச்சையாக மாற்ற முற்பட்டி ருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசை முற்றிலும் கண்மறைப்பு செய்துவிட்டு, எவ்வித முன்அறிவிப்போ ஆலோ சனையோ இன்றி அதானி குழுமம் மேற் கொண்டுள்ள இந்த ரகசியப் பங்கு விற்பனை முயற்சி, அதன் எதேச்சதிகாரப் போக்கை அப்பட்டமாகக் காட்டுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கட்டு மானக் காலத்திலும் வணிகரீதியான செயல் பாட்டின் முதல் ஆண்டிலும் அதானி நிறுவனம் குறைந்தது 51 சதவீதப் பங்குகளைத் தக்கவைக்க வேண்டும் என்பதும், பங்குரிமை அமைப்பில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்திற்கும் மாநில அரசின் முன்அனுமதி கட்டாயம் என்ப தும் விதியாகும். தற்போது வணிகச் செயல் பாட்டின் இரண்டாம் ஆண்டைக் காரணம் காட்டி, குறைந்தபட்சப் பங்கான 26 சதவீ தத்தைத் தக்கவைத்துக்கொண்டு 74 சதவீதம் வரை பங்குகளை விற்க ஒப்பந்தத்தில் இடமி ருந்தாலும், கேரளாவின் முதன்மை முக்கி யத்துவம் வாய்ந்த மாநில நலன்களைப் பலிகொ டுத்து, ஒட்டுமொத்தக் கப்பல் போக்குவரத்துத் துறையையும் ஒரு சர்வதேசக் கார்ப்பரேட் ஏகபோ கக் குழுமத்தின் வசம் ஒப்படைக்க முற்படு வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இச்சூழ்ச்சி குறித்துக் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது கடுமை யான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49 சதவீதப் பங்கு களை எம்.எஸ்.சி நிறுவனத்திற்கு மாற்ற முயலும் அதானியின் நடவடிக்கை ஆழமான கவலைக்குரியது என்றும், இத்துறைமுகம் பன்முகச் செயல்பாடுகளைக் கொண்ட உல கத்தரம் வாய்ந்த ஒன்றாகவே திட்டமிடப் பட்டதே தவிர, ஒரு தனிநபர் கார்ப்பரேட்டின் ஏக போகத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகைய பங்கு மாற்றங்க ளுக்கு மாநில அரசின் முன்அனுமதி கட்டாயம் என்பதை ஒப்பந்தம் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டுள்ள நிலையில், சந்தைப் போட்டித்தன்மை, தேசியப் பாதுகாப்பு மற்றும் கேரளாவின் நீண்ட கால நலன்களைப் பலியிடும் எந்தவொரு நகர்வையும் கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இத்துறைமுகத்தின் தன்னாட்சியையும், கேரள மக்களின் கூட்டு உரிமையையும் பாதுகாக்க, சதீசன் அரசு உடனே செயல்படவேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.