தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில உரிமைக்கும் பொதுக்கல்விக்கும் வேட்டு வைக்கும் ‘விக்சித் பாரத்’ மசோதா மதுரையில் அகில இந்திய ஆசிரியர் மாநாடு எச்சரிக்கை!

22 Feb 2026, 3:26 pm
மாநில உரிமைக்கும் பொதுக்கல்விக்கும் வேட்டு வைக்கும் ‘விக்சித் பாரத்’ மசோதா  மதுரையில் அகில இந்திய ஆசிரியர் மாநாடு எச்சரிக்கை!
<p><strong>மாநில உரிமைக்கும் பொதுக்கல்விக்கும் வேட்டு வைக்கும் &lsquo;விக்சித் பாரத்&rsquo; மசோதா&nbsp;மதுரையில் அகில இந்திய ஆசிரியர் மாநாடு எச்சரிக்கை!\</strong><br /> மதுரை, பிப். 22- இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கு மாறாக, உயர் கல்வித் துறையில் மாநில அரசு களின் அதிகாரத்தைப் பறிக்கும் &lsquo;விக்சித் பாரத் சிக்சா அதி ஷ்டான்&rsquo; (VBSA) மசோதாவைத் தடுத்து நிறுத்தி, பொதுக்கல்வி யைப் பாதுகாக்க வேண்டுமென மதுரையில் நடைபெற்று வரும் 34- ஆவது அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரி யர்கள் அமைப்பின் (AIFUCTO) மாநாடு அறைகூவல் விடுத்துள் ளது. தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் களின் கூட்டு நடவடிக்கைக் குழு &nbsp;(JAC) சார்பில், மூட்டா, ஏயுடி மற்றும் டிஎன்ஜிசிடிஏ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில் நாடு &nbsp;முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கான ஆசிரியப் பிரதிநிதி கள் பங்கேற்றுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மசோதா மாநாட்டில் சிறப்புரையாற்றிய கல்வி ஆர்வலர் &nbsp;பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் விபிஎஸ்ஏ மசோதாவின் ஆபத்துகளைப் பட்டியலிட்டார். &ldquo;இந்திய அர சியலமைப்பு அட்டவணை 7-ன் படி, பல்கலைக்கழகங்களை முறைப் படுத்தும் அதிகாரம் மாநில அர சுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், யுஜிசி சட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள இந்த புதிய &nbsp;மசோதா, மாநிலங்களின் அந்தப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரத்தைப் பறிக்கிறது. நாடாளுமன்றத்திற்கே இந்த மசோதாவை விவாதிக்க அதிகாரம் இல்லை எனும் போது, கூட்டு நாடாளுமன்றக் குழு அதை ஆய்வு செய்வது அரசிய லமைப்பிற்கு எதிரானது&rdquo; என்று அவர் சாடினார். மேலும், வகுப்பறைகளுக்குள் அறிவியலுக்குப் பதிலாக மத நம்பிக்கைகளையும், &lsquo;புனித&rsquo; நூல் களையும் திணிப்பது சட்டமற்ற சமூ கத்தை உருவாக்கும் என எச்ச ரித்த அவர், &lsquo;வளர்ச்சியடைந்த இந்தியா&rsquo; (Viksit Bharat) என்பது வெற்று முழக்கம் என்றும், இது பொது நிதியுதவி பெறும் கல்வி &nbsp;நிறுவனங்களை அழிப்பதற்கான சூழ்ச்சி என்றும் குறிப்பிட்டார். ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட வரலாறு மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் வி. சுவாமிநாதன், 1977-இல் கூட்டுச் செயல் குழு (JAC) அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஆசிரியர்கள் முன் னெடுத்த வீதிப்போராட்டங்களின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) மற்றும் விபிஎஸ்ஏ மசோதா அமலுக்கு வந்தால், உயர்கல்வி யின் தன்னாட்சி பறிபோய் கல்வி பெரும் செலவானதாக மாறும் என்று கவலை தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு ஊதிய மாற்ற த்தை 1.1.2026 முதல் அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர் அமைப்பு கள் ஓரணியில் திரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆர்ப்பாட்டமும் கோரிக்கைகளும் மாநாட்டின் ஒரு பகுதியாக, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரி யர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அரசாணை எண் 5-இன் பலன்களை உடனடியாக வழங்கக் கோரி அமெரிக்கன் கல்லூரி வாயி லில் பெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக மீட்டெ டுக்கும் வரை போராட்டம் ஓயாது என டிஎன்ஜிசிடிஏ பொதுச்செய லாளர் எஸ். சுரேஷ் தெரிவித் தார். முன்னதாக, ஏயுடி பொதுச்செய லாளர் சேவியர் செல்வகுமார் கடந்த கால போராட்ட அறிக்கை யைத் தாக்கல் செய்தார். பங்கேற்ற ஆளுமைகள் மதுரை மாநகராட்சி மேயர் &nbsp;(பொ) தி. நாகராஜன் மாநாட்டு மலரை வெளியிட்டார். மூட்டா &nbsp;பொதுச் செயலாளர் ஏ.டி. செந்தா மரைக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மூட்டா பொரு ளாளர் டாக்டர் ஆர். ராஜஜெய சேகர், நிர்வாகிகள் டாக்டர் பி. டேவிட் லிவிங்ஸ்டோன், டாக்டர் பி.ஜெயகாந்தி, டாக்டர் சி. பத்ம நாபன், ஏயுடி பொருளாளர் டாக்டர் ஜே. சார்லஸ் உள்ளிட்டப் பல பேரா சிரியர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அறிவியல் ரீதியான கல்வி, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் மாநில உரிமைகளை மீட் டெடுப்பதற்கான தீர்மானங்களு டன் மாநாடு பிப்ரவரி 23 (இன்று) நிறைவடைகிறது. &nbsp; &nbsp; &nbsp; &nbsp;(ந.நி)</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.