தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டு 2026 54.75 வினாடிகள் 42 ஆண்டு காத்திருப்பு!

3 Oct 2026, 11:33 pm
ஆசிய விளையாட்டு 2026   54.75  வினாடிகள் 42 ஆண்டு  காத்திருப்பு!

ஆசிய விளையாட்டு 2026 54.75 வினாடிகள் 42 ஆண்டு காத்திருப்பு!

டி. உஷாவின் சாதனையைத் தாண்டி, தங்கம் – வெள்ளி – வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் திரும்பிய கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜ்

ஜப்பானில் நகோயாவின் மிசுஹோ பார்க் தடகள அரங்கம். செப்டம்பர் 28 மாலை. மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதிப் போட்டி. கடைசித் தடையைத் தாண்டி நான்கு வீராங்கனைகள் தோளோடு தோள் நின்று இறுதிக் கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள். கோட்டைத் தொட்ட கணத்தில் கடிகாரம் காட்டிய எண் 54.75. அந்த ஒரே எண்ணில், இந்தியத் தடகளம் 42 ஆண்டுகளாகச் சுமந்து வந்த ஒரு காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக். ‘பய்யோளி எக்ஸ்பிரஸ்’ பி.டி. உஷா, நூறில் ஒரு வினாடி வித்தியாசத்தில் வெண்கலத்தைத் தவறவிட்ட அந்த ஓட்டத்தில் பதிவு செய்த நேரம் 55.42 வினாடி. நான்கு தசாப்தங்களாக எந்த இந்தியப் பெண்ணாலும் கடக்க முடியாத அந்த எல்லைக் கல்லை, கோவை மாவட்டத்தின் ஒரு சிறு கிராமப் பகுதியிலிருந்து புறப்பட்ட லாரி ஓட்டுநரின் மகள் 0.67 வினாடி வித்தியாசத்தில் தாண்டிச் சென்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55 வினாடிகளுக்குள் முடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் 28 வயது வித்யா ராம்ராஜ் வசமானது.

பி.டி.உஷாவின் சாதனை படைக்கப்பட்டபோது வித்யா பிறக்கவே இல்லை. அவர் பிறப்பதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட எண் அது. இந்தியத் தடகளப் புத்தகத்தில் மிக நீண்ட காலம் அசையாமல் நின்ற சாதனைகளில் ஒன்று. தலைமுறை தலைமுறையாக வீராங்கனைகள் வந்தார்கள், ஓடினார்கள், ஓய்ந்தார்கள். எண் மட்டும் அப்படியே இருந்தது. அதை மாற்றி எழுத ஒரு தமிழ்நாட்டுப் பெண் வர வேண்டியிருந்தது.

ஒரே விளையாட்டு, மூன்று நிறப் பதக்கங்கள்

ஐச்சி–நகோயாவில் வித்யாவின் பதக்கப் பயணம் வெள்ளியில் தொடங்கியது. கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மனு டி.எஸ்., எம்.ஆர். பூவம்மா, ஜோலார்பேட்டையின் விஷால் டி.கே. ஆகியோருடன் இணைந்து 3 நிமிடம் 14.46 வினாடிகளில் ஓடி இந்தியாவுக்கு வெள்ளி பெற்றுத் தந்தார்.

இரண்டாவது பதக்கம்தான் வரலாறு. தடை ஓட்ட இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் போட்டிச் சாதனையுடன் தங்கமும், கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் வெள்ளியும் வென்றனர். வித்யாவுக்குக் கிடைத்தது வெண்கலம். ஆனால் அந்த வெண்கலத்தின் மதிப்பு, பதக்கத்தின் நிறத்தில் இல்லை. அதனுடன் வந்த புதிய தேசிய சாதனையில் இருந்தது.

மறுநாள், செப்டம்பர் 29. மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம். கிரண் பஹல், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி சவுத்ரி ஆகியோருக்குப் பின் கடைசி சுற்றில் கோலை ஏந்தியவர் வித்யா. 3 நிமிடம் 29.69 வினாடிகளில் இந்தியா முதலிடம். பஹ்ரைன் (3:30.21) வெள்ளி, சீனா (3:31.02) வெண்கலம். இந்த ஆசிய விளையாட்டில் இந்தியத் தடகளம் வென்ற ஒரே தங்கம் இதுதான். இப்பிரிவில் இந்தியாவின் ஏழாவது ஆசியத் தங்கம்; 2018-க்குப் பிறகு முதல் தங்கம். தடகளத்தில் இந்தியா பெற்ற 24 பதக்கங்களில் (1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம்) மூன்று, இந்தக் கோவை வீராங்கனையின் கழுத்தில்.

மீனாட்சிபுரத்தில் தொடங்கிய ஓட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே வழுக்குப்பாறை ஊராட்சியின் மீனாட்சிபுரம். லாரி ஓட்டுநர் ராம்ராஜ் – மீனா தம்பதிக்கு 1998 செப்டம்பர் 20 அன்று பிறந்த இரட்டையர்கள் வித்யாவும் நித்யாவும். மூத்த சகோதரி சத்யா. வறுமை காரணமாகத் தனியார் பள்ளியிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாற வேண்டிய நிலை.

முதலில் ஹாக்கி மட்டையைத் தான் இரட்டையர்கள் பிடித்தார்கள். அவர்களின் கால்களில் இருந்த வேகத்தைக் கண்டுகொண்டவர் உடற்கல்வி ஆசிரியை. ஏழாம் வகுப்பில் தாய் மீனா, இரு மகள் களையும் ஈரோடு விளையாட்டு

விடுதியில் சேர்த்தார். பெண் பிள்ளைகளை இவ்வளவு தூரம் அனுப்புவதா என்று கேட்டவர்கள் உண்டு. “பெண் தானே” என்று ஏளனம் செய்தவர்களுக்கு மகள் பதக்கங்களால் பதில் சொல்லிவிட்டாள் என்று இன்று அந்தப் பெற்றோர் நெகிழ்கிறார்கள்.

தடைகளே பாடமான ஆண்டுகள்

2017 வரை 100, 200 மீட்டர் ஓடிய வித்யா, பின்னர் 400 மீட்டருக்கும் தடை ஓட்டத்துக்கும் மாறினார். விளையாட்டு ஒதுக்கீட்டில் பி.பி.ஏ. படிப்பு. 2018-ல் பாட்டியாலா தேசியப் பயிற்சி முகாம். ஆனால் பாதை நேராக இல்லை. கொரோனா தொற்று. டோக்கியோ ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில் குடல்வால் அறுவை சிகிச்சை. ஒலிம்பிக் கனவு கை நழுவியது.

2022-ல் சென்னைக்கு வந்து, பயிற்சியாளர் நேபால் சிங் ரத்தோரிடம் தனியாகப் பயிற்சியைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பயிற்சி, பயணம், உணவு என எல்லாச் செலவுக்கும் தோள் கொடுத்தவர் இரட்டைச் சகோதரி நித்யா. வருமான வரித் துறையில் கிடைத்த தனது சம்பளத்தைத் தங்கையின் கனவுக்காகச் செலவிட்டார். பின்னர் வித்யாவுக்கு ரயில்வேயில் பணி கிடைத்தது.

நூறில் ஒரு வினாடியின் வலி

2023 செப்டம்பரில் சண்டிகரில் 55.43 வினாடி. பி.டி.உஷாவின் சாதனைக்கு நூறில் ஒரு வினாடி மட்டுமே குறைவு. ஒரு மாதத்தில் ஹாங்சோ ஆசிய விளையாட்டின் தகுதிச் சுற்றில் 55.42. சாதனை சமன். ஆனால் முறியடிக்க முடியவில்லை. அந்த விளையாட்டில் தடை ஓட்டத்தில் வெண்கலம், இரு தொடர் ஓட்டங்களில் வெள்ளி என மூன்று பதக்கங்கள். ஆசிய விளையாட்டில் இந்தியா வுக்காகப் பங்கேற்ற முதல் இரட்டையர்கள் என்ற பெருமையும் வித்யா–நித்யாவுக்குக் கிடைத்தது.

2024-ல் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் ஓட்ட அணியில் இடம். 2025-ல் தென் கொரியாவின் குமியில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலம். ஆனால் 55.42 என்ற எண் மட்டும் அசையவில்லை.

மூன்று ஆண்டுகள் அந்த எண்ணைத் துரத்தினார். நகோயாவில் அது வீழ்ந்தது.

இடையில் உள்நாட்டில்

உஷாவின் இன்னொரு சாதனையை வீழ்த்தினார். 2024 தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில் 56.23 வினாடியில் ஓடி, 1985-ல் உஷா படைத்த 56.80 என்ற 39 ஆண்டு போட்டிச் சாதனையை முறியடித்தார். 2025 கொச்சி ஃபெடரேஷன் கோப்பையில் 56.04 என்ற போட்டிச் சாதனையுடன் தங்கம். தேசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம். வெற்றிகள் குவிந்தன. ஆனால் அவர் மனதில் இருந்தது ஒரே இலக்கு.

“சாதனைகள் முறியடிக்கப்படவே”

முதல் வாழ்த்து, சாதனைக்குச் சொந்தக்காரரிடமிருந்தே வந்தது. சாதனைகள் முறியடிக்கப்படுவதற் காகவே இருக்கின்றன; தாங்கள் வகுத்த எல்லையை அடுத்த தலைமுறை கடந்து செல்வதைப் பார்ப்பதைவிட ஒரு வீராங்கனைக்குப் பெரிய வெகுமதி இல்லை என்று பி.டி. உஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இரு தலைமுறைகளை இணைத்த தருணம் அது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வெண்கலம் வென்றபோது ரூ.30 லட்சமும், தொடர் ஓட்டத் தங்கத்துக்குப் பிறகு ரூ.75 லட்சமும் ஊக்கத்தொகை அறிவித்து வாழ்த்தினார். அக்டோபர் 1 இரவு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் வந்து மகுடம் சூட்டி வரவேற்றார். எஸ்.டி.ஏ.டி. விடுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

இந்தச் செய்தி நாட்டு எல்லையையும் தாண்டியது. இந்தியத் தடகளத்தின் மிக நீண்டகாலச் சாதனைகளில் ஒன்று வீழ்ந்தது என்று துபாயின் ‘கல்ஃப் நியூஸ்’ எழுதியது. ஹாங்சோவில் முடிக்காமல் விட்ட கணக்கை வித்யா நகோயாவில் முடித்தார் என்று அமெரிக்கத் தடகள இணையதளம் ‘ரன்பிளாக்ரன்’ குறிப்பிட்டது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ‘ஒலிம்பிக்ஸ்.காம்’ தளம், 42 ஆண்டு தேசிய சாதனை மாற்றி எழுதப்பட்ட நாள் என்று அன்றைய இந்தியச் செய்திகளுக்குத் தலைப்பிட்டது. ‘லாரி ஓட்டுநரின் மகள் வரலாற்றை மாற்றி எழுதினார்’ என்பதே ஆங்கில நாளிதழ்களின் பொதுவான தலைப்பு.

தந்தையின் நெகிழ்ச்சி, சகோதரியின் இடம்

இந்த வெற்றியில் ஒரே ஒரு குறை. கடந்த முறை ஹாங்சோவில் உடன் ஓடிய நித்யா, பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் இம்முறை ஜப்பானுக்குச் செல்ல முடியவில்லை. மகள்கள் நாட்டுக்காக எத்தனையோ சாதித்திருந்தாலும் உஷாவின் சாதனையை முறியடித்துப் பதக்கம் வென்றது பெரு மகிழ்ச்சி என்றும், நித்யா விரைவில் மீண்டு இருவரும் சேர்ந்து மேலும் சாதிப்பார்கள் என்றும் தந்தை ராம்ராஜ் நெகிழ்ச்சியுடன் கூறினார். மூன்று ஆண்டு இடைவிடாத பயிற்சிக்குக் கிடைத்த பலன் இது என்பது அவரது சொல்.

விமான நிலையத்தில் வித்யா பேசினார்: “பிற நாட்டு வீராங்கனைகள் மிகத் திறமையானவர்கள்; அவர்களுக்கு நிகராக இந்தியாவும் முடியும் என்று நிரூபிக்கவே சென்றோம்; அரசின் ஆதரவு இல்லாமல் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது. உஷாவின் சாதனைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும், இன்னும் பல இளைஞர்களை மைதானத்துக்கு இழுக்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு.”

பத்து தடைகளுக்கு அப்பால்

400 மீட்டர் தடை ஓட்டத்தில் பத்து தடைகள். வித்யாவின் வாழ்க்கையில் அதைவிட அதிகம். வறுமை, நோய், அறுவை சிகிச்சை, நூறில் ஒரு வினாடியில் தவறிய சாதனை. ஒவ்வொன்றையும் தாண்டியபோது பின்னால் நின்றது ஒரு லாரி ஓட்டுநரின் உழைப்பு, ஒரு தாயின் துணிச்சல், ஒரு சகோதரியின் சம்பளம். மீனாட்சிபுரத்தின் மண் சாலையில் தொடங்கிய ஓட்டம், நகோயாவின் பதக்க மேடையில் தேசியக் கொடியுடன் நின்றது. 54.75 என்பது இனி ஒரு நேரம் மட்டும் அல்ல. சிறு கிராமங்களின் பெண் பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட ஒரு அழைப்பு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.