தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டுமனை பட்டா கோரி விதொச காத்திருப்புப் போராட்டம்

5 Feb 2026, 3:40 pm
வீட்டுமனை பட்டா கோரி விதொச காத்திருப்புப் போராட்டம்
<p><strong>வீட்டுமனை பட்டா கோரி விதொச காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>சேலம், பிப்.5&ndash; சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், &nbsp;தங்காயூர் கிராமம் மலையனூர் பகுதி யைச் சேர்ந்த பட்டியலின மக்க ளுக்கு இலவச வீட்டுமனை பட்டா &nbsp;வழங்கக் கோரியும், பொது வழித்தட &nbsp;ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியா ழனன்று காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. கடந்த 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் &nbsp;ஆட்சி காலத்தில், சங்ககிரி ஆதிதிரா விட நலத்துறை சார்பில் தனியார் நிலம் &nbsp;கையகப்படுத்தப்பட்டு, மலையனூர் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. அங்கு அரசு &nbsp;சார்பில் கட்டித் தரப்பட்ட 7 அடி உயர முள்ள தொகுப்பு வீடுகளில் மக்கள் &nbsp;வசித்து வருகின்றனர். தற்போது குடும்ப &nbsp;உறுப்பினர்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ள நிலையில், அந்த சிறிய வீடு களில் வசிக்க முடியாமல் மக்கள் கடும் &nbsp;நெருக்கடியை சந்தித்து வருகின்ற னர். அதேநேரத்தில், மலையனூர் பட்டியலின தெரு அருகே உள்ள &lsquo;மலை யன்காட்டு கரடு&rsquo; எனும் அரசு புறம் போக்கு நிலத்தின் (சர்வே எண்: 207, &nbsp;மொத்த பரப்பு 20 ஏக்கர் 10 சென்ட்), &nbsp;அப்பகுதியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் சுமார் 12 ஏக்கர் &nbsp;அளவிற்குப் பட்டா பெற்று தங்கள் வசப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எஞ்சியுள்ள 8 ஏக்கர் &nbsp;நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் ஆடு மேய்த்தும், விறகு சேகரித்தும் பொது பயன் பாட்டிற்காகப் பயன்படுத்தி வருகின்ற னர். இட நெருக்கடியில் தவிக்கும் 60 &nbsp;பட்டியலின குடும்பங்களுக்கு, மலை யன்காட்டு கரடு பகுதியில் உள்ள &nbsp;8 ஏக்கர் அரசு நிலத்தை வீட்டுமனை களாக ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும். &nbsp;மலையன்காட்டு கரடு நிலத்திற்குச் செல்லும் 25 அடி அகலமுள்ள அரசு வழிப்பாதையை, தனியார் சிலர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு நிலத்தைப் பட்டா போட்டு ஆதிக்க சமூகத்தினர் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. &nbsp;அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் &nbsp;ஜி. கணபதி தலைமையில் நடைபெற்ற &nbsp;இப்போராட்டத்தை, மாநிலச் செயலா ளர் வி. மாரியப்பன் தொடங்கி வைத்து &nbsp;உரையாற்றினார். இதில் மாவட்டச் செய லாளர் எஸ்.கே. சேகர், ஒன்றியச் செய லாளர் சி.எஸ். பழனியப்பன், மாவட்ட &nbsp;துணைச் செயலாளர் ஆர். பழனிசாமி, &nbsp;ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஆர். &nbsp;துரைசாமி, எம். சேகரி உள்ளிட்ட நிர் வாகிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர். &nbsp;முடிவில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சங்கத்தின் மாநிலப் பொதுச் &nbsp;செயலாளர் வீ.அமிர்தலிங்கம் போராட் டத்தை நிறைவு செய்து வைத்து, கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினார். அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது நியாயமான போராட் டம் தொடரும் எனச் சங்க நிர்வாகிகள் எச் சரித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.