முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு மனை பட்டா வழங்க விதொச வலியுறுத்தல்

4 Jan 2026, 5:55 pm
விவசாயத் தொழிலாளர்களுக்கு மனை பட்டா வழங்க விதொச வலியுறுத்தல்
<p><strong>விவசாயத் தொழிலாளர்களுக்கு மனை பட்டா வழங்க விதொச வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, ஜன. 4- வீடில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத்தொழி லாளர் சங்கத்தின் ஏரியூர் ஒன்றியப்பேரவை வலியுறுத்தியுள் ளது. அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஏரியூர் &nbsp;ஒன்றியப் பேரவை கூட்டம் நெருப்பூரில் &nbsp;நடைபெற்றது. நிர்வாகி &nbsp;அசோகன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் எம். முத்து, மாவட்ட தலைவர் என்.பி. முருகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார், &nbsp;மாவட்ட பொருளாளர் எம். தங்கராசு நிர்வாகி ரவி, ஆகியோர் &nbsp;உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் வி.மாதன் வாழ்த்திப் பேசினார். இதில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் &nbsp;நிலம் இலவசமாக வழங்க வேண்டும். வீடுல்லாத மக்க ளுக்கு வீட்டு மனை பட்டா, பல்வேறு புறம்போக்கு நிலத்தில் &nbsp;பல ஆண்டுகாலமாக வீடுகட்டிகுடியிருக்கும் ஏழைமக்க ளுக்கு நிபந்தனையின்றி மனைப்பட்டா வழங்க வேண்டும். &nbsp;60 வயது பூர்த்தியடைந்த அனைத்து விவசாயத் தொழிலா ளர்களுக்கும் ரூபாய் 3000/- பென்ஷன் வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. &nbsp; பேரவை கூட்டத்தில் 15 பேர் கொண்ட ஒன்றியக் கமிட்டி &nbsp;அமைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளராக ஏ.அசோகன் தேர்வு செய்யப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram