100 நாள் வேலை திட்டத்தை பழைய முறையிலேயே செயல்படுத்தக் கோரி வி.தொ.ச. ஆர்ப்பாட்டம்
15 May 2026, 10:52 pm

100 நாள் வேலை திட்டத்தை பழைய முறையிலேயே செயல்படுத்தக் கோரி வி.தொ.ச. ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 15- விபிஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை தொடர்ந்து பழைய முறையிலேயே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கம், திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேக்குடி ஊராட்சி மற்றும் உத்தமர்சீலி ஆகிய இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடியாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதேபோன்று, உத்தமர்சீலி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம், வி.தொ.ச மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்டப் பொருளாளர் இளங்கோவன், கிளைச் செயலாளர் உலகநாதன், சிபிஎம் கிளைச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் துலையாநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வீர விஜயன் தலைமை வகித்தார்.

மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ஒன்றிய பொருளாளர் ரெங்கராஜ், ஒன்றியத் தலைவர் செல்லப்பெருமாள், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் லோகநாதன், கிளைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், பழனிச்சாமி, நல்லதம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை, பரம்பூர், திருநல்லூர், மேலூர், திருநாடு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு முறையே ஏ.சோமையா, கே.பிரகாஷ், ஆர்.ரெங்கசாமி, சி.சந்திரசேகர், சி.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். சுப்பையா, ஒன்றியச் செயலாளர் டி. ரகுபதி, விதொச ஒன்றியத் தலைவர் சி. ஆறுமுகம், செயலாளர் எம்.ஜோஷி, விச ஒன்றியச் செயலாளர் ஆர்.சி. ரெங்கசாமி, துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், வலங்கை மான், நீடாமங்கலம், குடவாசல் மற்றும் கொரடாச்சேரி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தர்ணா நடைபெற்றது.

வலங்கைமான் ஒன்றியத்தில் சாராநத்தம், கண்டியூர், மாணிக்கமங்கலம், பூந்தோட்டம் ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சின்னதுரை பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்.

விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். இளங்கோவன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் ஒன்றியம், தப்பாளம்புலியூர் ஊராட்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் இணை ஒருங்கி ணைப்பாளர் கே. இளையராஜா தலைமை வகித்தார்.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரையா கண்டன உரையாற்றினார்.

புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஒருங்கிணைப்பாளர் என்.

இடும்பையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. குடவாசல் குடவாசல் ஒன்றியத்தில் பிலாவடியில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உரையாற்றினார்.

போராட்டத்திற்கு அமைப்பின் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.குமரேசன் தலைமை வகித்தார்.

ஒன்றியத்தலைவர் ஜி.வாசுதேவன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் என்.

மருதவாணன் தலைமையில் சிபிஎம் குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.லெனின் உரையாற்றினார்.

கொரடாச்சேரி கொரடாச்சேரி ஒன்றியம், பெருந்தரங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். தம்புசாமி கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.

நீடாமங்கலம் நீடாமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. ஜான்கென்னடி கண்டன உரையாற்றினார்.

அதனங்குடியில் விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.காளியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.

ராதா கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.

கரூர் கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணைமலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, ஒன்றிய அமைப்பாளர் ஆர். துரைசாமி தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ராஜேந்திரன், எஸ். பூரணம், ஒன்றியக் குழு உறுப்பினர் அ. காதர்பாட்சா, மா. குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழுவிற்கு உட்பட்ட மகாதானபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார்.

விதொச மாநிலப் பொருளாளர் எ. பழனிசாமி, மாவட்டத் தலைவர் கண்ணதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிள்ளாப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்டக் குழு உறுப்பினர் எம். பழனியாண்டி தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. சரவணன், ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சங்கப் பிள்ளை தலைமை வகித்தார்.

விதொச மாவட்டச் செயலாளர் பி. ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சக்திவேல், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.

குளித்தலை ஒன்றியக் குழுவிற்கு உட்பட்ட இனூங்கூர் ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் உரை யாற்றினார்.

ராஜேந்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சிவா தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலாளர் சங்கரநாராயணன், ஒன்றியத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.

நாகப்பட்டினம் நூறு நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைஞாயிறு ஒன்றியக் குழு சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் காடந்தேத்தி, கச்சாநகரம், கொத்தங்குடி ஆகிய கிராம பஞ்சாயத்து அலு வலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.