100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த விதொச மனு
27 Jan 2026, 3:28 pm
<p><strong>100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த விதொச மனு</strong></p>
<p>நாமக்கல், ஜன.27- பள்ளிபாளையம் ஒன்றியப் பகுதியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகளி டம் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தக்கோரி மனு அளித்தனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கிராம சபை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் எலந்த குட்டை, தட்டாங்குட்டை, பள்ளிபாளை யம் அக்ரஹாரம், உள்ளிட்ட பள்ளி பாளையம் ஒன்றிய பகுதியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அதில் வேளாண் நிலைமைகள் ஏற் பட்டுள்ள மாற்றங்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேலையையும் வரு மானத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இடதுசாரிகளின் நிர் பந்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுக ளாக, கிராமப்புற ஏழைகளின் குடும் பங்களுக்கு 100 நாளைக்கு வேலை அளிக்கும் சட்டம் செயல்படுத்தப்பட்டு ஓரளவுக்கு வருமானம் கிடைத்து வந் தது. தற்போது ஒன்றிய அரசு பொறுப் பேற்ற காலம் முதல், நிதி ஒதுக்கீடு செய் யாமலும், பயனாளிகள் எண்ணிக் கையை குறைத்து, மகாத்மா காந்தி பேரி லான சட்ட வரையுடன் இருந்த சட் டத்தை பெயரையும் அடிப்படை விதி களை மாற்றி, ஏழைகளுக்கு உதவாத வி.பி.ஜி ராம் திட்டமாக மாற்றியுள்ளது. எனவே பழையபடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி என்ற பெயரிலே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். மேலும் இந்த திட்டத்தை பலப்படுத்தி வேலை நாட் களை இருநூறு நாட்கள் ஆகவும், தினக் கூலியை 700 ஆகவும் உயர்த்திட வேண் டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது.</p>
