முந்தய பக்கம்

விதொச காரிமங்கலம் ஒன்றிய மாநாடு

14 Feb 2026, 4:33 pm
விதொச காரிமங்கலம் ஒன்றிய மாநாடு
<p><strong>விதொச காரிமங்கலம் ஒன்றிய மாநாடு</strong></p> <p>தருமபுரி, பிப்.14- விவசாயத் தொழிலாளர் சங்க காரிமங்கலம் ஒன்றிய மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றிய மாநாடு, வெள்ளிச்சந்தை யில் சனியன்று நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கு. பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாநில துணைத்தலை வர் ஜி.கணபதி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் எம்.முத்து சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், காரிமங்கலம் வட்டத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண் டும். வீடு இல்லாத மக்களுக்கு ரூ.10 லட்சத்தில் வீடு கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் காரிமங்கலம் ஒன்றியத் தலை வராக மாதேஷ், செயலாளராக சி.ராஜா, பொருளாளராக பவித்ரா உட்பட 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram