தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுநீர் ஊருக்குள் வரும் வகையில் சாக்கடை பாலம் தடையை மீறி அதிகாரிகளுக்கு ‘பாராட்டு விழா’ நடத்திய விதொச

16 Nov 2025, 3:30 pm
கழிவுநீர் ஊருக்குள் வரும் வகையில் சாக்கடை பாலம் தடையை மீறி அதிகாரிகளுக்கு ‘பாராட்டு விழா’ நடத்திய விதொச
<p><strong>கழிவுநீர் ஊருக்குள் வரும் வகையில் சாக்கடை பாலம் தடையை மீறி அதிகாரிகளுக்கு &lsquo;பாராட்டு விழா&rsquo; நடத்திய விதொச</strong></p> <p>ஈரோடு, நவ.16- கழிவுநீர் குடியிருப்பிற்குள் வரும் வகையில் சாக்கடை பாலம் அமைத்த அதிகாரிகளுக்கு எழுமாத்தூரில் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா தடையை மீறி நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் பகுதி யில் வாரச்சந்தை செயல்பட்டு வருகி றது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல &nbsp;ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பாலம் &nbsp;கட்டப்பட்டது. இதன் வழியாக கூட் டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இதனால் கழிவுநீர் கடந்து செல்ல &nbsp;முடியவில்லை. குளம் போல் தேங்கி &nbsp;நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதில் பெருமளவு கொசுக்கள் உற்பத்தியா கிறது. மழைக்காலத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உண் டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகு றித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகார் தெரிவித்தும் மாவட்ட ஆட்சி யர் அவர்களிடம் புகார் அளித்தும் 5 &nbsp;மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சாக்க டையை அமைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் என்ற வகையில் நூதன போராட்டம் நடை பெற்றது. போலீசாரின் தடையை மீறி &nbsp;எழுமாத்தூர் பேருந்து நிறுத்தம் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சங்கத் தின் தாலுகா செயலாளர் டி.தங்க வேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன் சிறப் புரையாற்றினார். சிபிஎம் தாலுகா &nbsp;செயலாளர் எம்.சசி, தமுஎகச மாவட் டப் பொருளாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். &nbsp;கமிட்டி உறுப்பினர் எம்.அண்ணா துரை நிறைவுரையாற்றினார். மாற் றுத்திறனாளி சங்க நிர்வாகி எம். லோகநாதன், சங்கரம்மாள், சேம லையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.