பொது வேலை நிறுத்தத்தில் விவசாய தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் விதொச பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் வேண்டுகோள்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>பொது வேலை நிறுத்தத்தில் விவசாய தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் விதொச பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் வேண்டுகோள்</strong></p>
<p>செங்கல்பட்டு,பிப்.9- தொழிலாளர் விரோத மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து பிப்.12அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கம் முழுமையாக பங்கேற் போம் என சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங் கம் அறைகூவல் விடுத்துள்ளார். விதொச செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்து டன் போடப்பட்டுள்ள, இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சட்ட அங்கீகாரம் கொண்ட 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘விபி- ஜி ராம்ஜி திட்டம்’ என்ற பெயரில் சட்ட அந்தஸ்து இல்லாத திட்டத்தை அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என்றும் அவர் சாடினார். மேலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்துவிட்டு பழைய 44 சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் சுமார் 65 லட்சம் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,000 கோடி ஊதிய பாக்கியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். தமிழக அரசைப் பொறுத்த வரை, செப்டம்பர் மாதம் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பட்டா வழங்க வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் நாகை மாலி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிய படி, வரும் 17-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அல்லது தனித்துறை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வி.அமிர்த லிங்கம் கேட்டுக்கொண்டார்.</p>
