தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தர்மபுரம் நீர்வழிப்போக்குவரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிட ஆட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும் : விதொச கோரிக்கை

19 Jan 2026, 2:23 pm
தர்மபுரம் நீர்வழிப்போக்குவரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிட ஆட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும் : விதொச கோரிக்கை
<p><strong>தர்மபுரம் நீர்வழிப்போக்குவரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிட ஆட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும் : விதொச கோரிக்கை</strong></p> <p>நாகர்கோவில். ஜன.19- அகஸ்தீஸ்வரம் வட்டம், தர்மபுரம் தெற்கு கிராமம் நீர்வழிப் போக்குவரத்து கால்வாய் ஆக்கிர மிப்பு அகற்றுதல் தொடர்பாக ஆக்கிரமிப்பு குறித்த விபரங்கள் அடங்கிய படிவம் 1மற்றும் வரை படத்தை நீர்வளத்துறைக்கு உட னடியாக வழங்கிட வட்டாட்சிய ருக்கு ஆணை பிறப்பித்திட வேண்டும் என குமரி மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடப் பட்டுள்ளது. சங்கத்தின் குமரி மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமையில் ஆட்சியரிடம் &nbsp;அளிக் கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி, தேரிமேல்விளை முதல் ஈயன் விளை வரை செல்லும் சம்பக்குளம் நீர்வழி போக்குவரத்து கால்வா யின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக கால்வாயில் அதிகமான அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்து வரு கின்றன. மேலும் கால்வாயில் அதிக மாக தண்ணீர் வரும் போது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாண வியர் கால்வாய் தண்ணீர் மற்றும் சேறு சகதிகளை கடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அத்துடன் விவசாய பொருட்கள் எடுத்து செல்ல வசதியாக மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவில் தெருக்கள் குறுகலாக உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரு கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு &nbsp;காணக்கோரியும், ஆக்கிரமிப்பு களை அகற்றிட வலியுறுத்தியும இவ்வட்டார மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து பலமுறை மனுக்கள் கொடுத்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாரி கள் நேரில் வந்து ஆக்கிரமிப்பு களை அடையாளப்படுத்தி சென் றுள்ளனர். மேலும், அகஸ்தீஸ் வரம் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு கள் குறித்த விபரங்கள் அடங்கிய படிவம் 1 மற்றும் வரைபடம் தந்து உதவும் பட்சத்தில் ஆக்கிர மிப்புகள் அகற்றித் தரப்படும் எனவும், இதுகுறித்து வட்டாட்சி யருக்கு கடிதம் எழுதியுள்ளதாக வும், இதுவரையிலும் நீர்வளத் துறைக்கு விபரம் தரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எனவே, தாங்கள் இவ் விசயத்தில் தலையீடு செய்து பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிர மிப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவம் 1 மற்றும் வரைபடத்தை காலதாமதமின்றி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிட உதவிடுமாறு வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.