100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திடுக விதொச மாநாடு வலியுறுத்தல்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திடுக விதொச மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>சேலம், பிப். 20- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப் படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி ஒன்றிய மாநாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றன. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஆனந்த மஹா லில் வெள்ளியன்று 5-வது ஒன்றிய மாநாடு மாவட்டத் தலை வர் ஜி. கணபதி துவக்கிவைத்து உரையாற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர் எம். சேகரி வரவேற்றார். எஸ். பழனி யப்பன் வேலை அறிக்கையையும், துரைசாமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அஇவிதொச மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர் வாழ்த்திப் பேசி னார். இதில், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்க ளாக உயர்த்தி, தினசரி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண் டும். இத்திட்டத்தின் பெயர் மாற்றத்தை அரசு உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். எடப்பாடி வட்டம், தங்கா யூர் கிராமம், மலையனூர் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை வழங்க வட்டாட்சியர் அளித்த உறுதிமொழியின்படி, அரசுக்கு சொந்தமான மலையங்காட்டுகரடு புறம் போக்கு நிலத்தை (சர்வே எண்: 207/2, சுமார் 3 ஏக்கர் 75 சென்ட்) உடனடியாக அளவீடு செய்து, மனு அளித் துள்ள 60 குடும்பங்களுக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொங்கணாபுரம் ஒன்றிய கமிட்டி யின் தலைவராக எஸ்.ஆர்.ராஜகோபால், செயலாளராக சி. எஸ்.பழனியப்பன், பொருளாளராக துரைசாமி உள் ளிட்ட 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. இதே போன்று, எடப்பாடி ஒன்றிய கமிட்டியின் தலைவராக மயிலி, செயலாளர் சுமதி, பொருளாளர் விஜயா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநில நிர்வாகி முத்து உரையாற்றினார். இதில், திரளான விவசாயத் தொழிலா ளர்கள் கலந்துகொண்டனர்.</p>
