சென்னை விரைவு செய்திகள்
29 Jan 2026, 5:39 pm

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு கிராம சபையில் விதொச கண்டனத் தீர்மானம்

ராணிப்பேட்டை, ஜன. 29- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை 'விஜிபி ராம்' என மாற்றிய ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோளிங்கர் வட்டம் மருதாலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விதொச மருதாலம் கிளைத் தலைவர் மற்றும் சோளிங்கர் தாலுகா செயலாளர் வேலு தலைமையில், சங்க நிர்வாகிகள் இதுகுறித்த தீர்மான நகலை ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜி அவர்களிடம் வழங்கினர். திட்டத்தின் பெயரை மாற்றாமல் பழைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை, ஜன. 29- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

உறுதித் திட்டத்தின் பெயரை 'விஜிபி ராம்' என மாற்றிய ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோளிங்கர் வட்டம் மருதாலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விதொச மருதாலம் கிளைத் தலைவர் மற்றும் சோளிங்கர் தாலுகா செயலாளர் வேலு தலைமையில், சங்க நிர்வாகிகள் இதுகுறித்த தீர்மான நகலை ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜி அவர்களிடம் வழங்கினர். திட்டத்தின் பெயரை மாற்றாமல் பழைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.