விதொச குடிமங்கலம் ஒன்றிய மாநாடு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>விதொச குடிமங்கலம் ஒன்றிய மாநாடு</strong></p>
<p>உடுமலை, டிச.28- விவசாயத் தொழிலாளர் சங்க குடிமங்கலம் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க திருப்பூர் மாவட்டம், குடி மங்கலம் ஒன்றிய மாநாடு ஞாயி றன்று பெதப்பம்பட்டியில் நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலை வர் வல்பூரான் தலைமை வகித்தார். ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் தலைவர் ரங்கநாதன் துவக்கவுரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசிகலா, விவ சாயிகள் சங்க நிர்வாகி தங்கவடிவேலன், மாதர் சங்க நிர்வாகி கலைவாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தேசிய அளவில் விவ சாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஏற் படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகு திகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக வல் பூரான், செயலாளராக ஆறுமுகம், பொருளாள ராக ராஜன், துணைத்தலைவர்களாக வேலுச்சாமி, செல்வராஜ், துணைச்செயலாளராக கார்த்திகே யன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் நிறை வுரையாற்றினார். பொருளாளார் பழனிச்சாமி நன்றி கூறினார்.</p>
