விதொச பவானி தாலுகா மாநாடு
19 Jul 2026, 10:34 pm
<p><strong>விதொச பவானி தாலுகா மாநாடு</strong></p><p>ஈரோடு, ஜூலை 19- விவசாயத் தொழிலாளர் சங்க பவானி தாலுகா மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா 11 ஆவது மாநாடு, ஊராட்சிக்கோட்டையில் நடைபெற்றது. தாலுகா தலைவர் எஸ்.தம்பி தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் துவக்கவுரையாற்றினார். இம்மாநாட்டில், ‘விபி ஜி ராம்ஜி’ திட்டத்தை திரும்பப்பெற்று, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை உறுதி செய்து, ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் ரூ.700 தினக்கூலி வழங்க வேண்டும். வாய்க்கால்பாளையம் பகுதியில் கழிவுநீர் வெளியேற வசதி செய்ய வேண்டும். கவுந்தப்பாடி தொடர்ந்து கிராம ஊராட்சியாக செயல்பட வேண்டும். ஒரிச்சேரி புதூர், வேலாமரத்தூர் பட்டியலின மக்கள் மயா னத்திற்கு செல்ல பாதை அமைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக எஸ்.மாணிக்கம், செய லாளராக பி.கண்ணன், பொருளாளராக எஸ். ஜானகி உட்பட 13 தாலுகாக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து, மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உரையாற்றினார். முடி வில், சங்கர் நன்றி கூறினார்.</p>
