முந்தய பக்கம்

முதியோர் இல்லங்கள், அரசுப் பள்ளிகளுக்கு விஐடி நலத்திட்ட உதவிகள்

5 Mar 2026, 3:59 pm
முதியோர் இல்லங்கள், அரசுப் பள்ளிகளுக்கு விஐடி நலத்திட்ட உதவிகள்
<p><strong>முதியோர் இல்லங்கள், அரசுப் பள்ளிகளுக்கு விஐடி நலத்திட்ட உதவிகள்</strong></p> <p>வேலூர், மார்ச் 5- வேலூர் விஐடி பல்கலைக்கழக உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு (மார்ச் 5), பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பார்வைத்திறன் குறைபாடு உடையோர்க்கு 50 ஊன்றுகோல்களும், முதியோர் இல்லங்களுக்கு மெத்தைகளுடன் கூடிய படுக்கைகளும் வழங்கப்பட்டன. மேலும், வேலூர் மாவட்டத்திலுள்ள 10 அரசுப் பள்ளிகளுக்குத் தூய்மைப் பணியினை மேம்படுத்தத் தேவையான உபகரணங்களும், வேலூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான கட்டில் மற்றும் படுக்கை வசதிகளும் அளிக்கப்பட்டன. பல்வேறு மறுவாழ்வு மையங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குக் கல்விப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கிக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்ட கல்வி நிறுவன முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram