விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு டாக்டர் பட்டம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு டாக்டர் பட்டம்</strong></p>
<p>வேலூர், பிப்.20- விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநா தனுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரிவி கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினரான பலகோர்ன் சுவன்ரத் மற்றும் ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் பிச்சை ஜன்மனி “கவுரவ டாக்டர்” பட்டத்தை வழங்கி சிறப்பித்தனர். இந்த உயரிய விருது சங்கர் விசுவநா தனின் பொறியியல் கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பு மற்றும் தலைமைத் துவம் மற்றும் உயர்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றை பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், டாக்டர் ஏ.ஷ்ர வன் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றன.</p>
