தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விஐடி பல்கலைக்கழக ரிவேரா கலை விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது

24 Feb 2026, 3:55 pm
விஐடி பல்கலைக்கழக ரிவேரா கலை விழா  நாளை கோலாகலமாக தொடங்குகிறது
<p><strong>விஐடி பல்கலைக்கழக ரிவேரா கலை விழா&nbsp;&nbsp;நாளை கோலாகலமாக தொடங்குகிறது</strong></p> <p>வேலூர், பிப் 24 - வேலூர் விஐடி பல்கலை க்கழகத்தில் ரிவேரா 2026 கலை விழா பிப்ரவரி 26 முதல் மார்ச் 01 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. &nbsp;இதில் 18,000 பங்கேற் பாளர்கள், ரூ.25 லட்சத்துக் கும் அதிகமான பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.முதன்மை நிகழ் வாக சுனிதா சவுகான், எஸ்.தமன், பென்னி தயாள், பிரதீப்குமார் இசை &nbsp;பிரபலங்கள் பங்கேற்கின்ற னர். இதுகுறித்து, விஐடி வேந்தர் கல்விக்கோ முனை வர் கோ.விசுவநாதன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிவேரா கலை விழா இந்த ஆண்டு அதன் 23ஆவது பதிப்பாக கொண்டாடப்படுகிறது. ப்ரீ-ரிவேரா நிகழ்வுகள் பிப்ரவரி 19 முதல் 22 வரை நடைபெற்று முடிந்தன. ப்ரீ-ரிவேரா விளையாட்டு நிகழ்வுகள் பிப்ரவரி 3 &nbsp;முதல் 22 வரை நடத்தப் பட்டன. முதன்மை ரிவேரா கலை விழா பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. &nbsp; &nbsp;ரிவேரா 2026இல் விளை யாட்டுகளைத் தவிர்த்து 136 முதன்மை நிகழ்வுகளும் 16 பிரீமியம் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 18,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். அதில் 1,000க்கும் மேற்பட்ட &nbsp;வெளி கல்லூரி மாணவர் கள் உள்ளனர். 28 வெவ் வேறு நாடுகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வெளி நாட்டு மாணவர்கள் INFUSION என்ற பல கலாச்சார அதிசய நிகழ்வில் பங்கேற்கின்றனர். &nbsp;இத்தாலியிலிருந்து 33 மாணவர்களும் அவர்க ளுடைய 2 பேராசிரியர்களும் விழாவில் கலந்துகொள்ள விஐடி வளாகத்திற்கு வந்து ள்ளனர். மொத்த பணப்பரிசு மதிப்பு ரூ. 25 லட்சத்துக்கும் மேல் உள்ளது. இந்த ஆண்டு புதிதாக பிப்ரவரி 19 அன்று சிறப்புக் குழந்தைகள் விளையாட்டு நிகழ்வு அறி முகப்படுத்தப்பட்டது. முதன்மை ரிவேரா நிகழ்வுகள் பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை நடை பெறும். இதில் 100க்கும் மேற்பட்ட முதன்மை ரிவேரா நிகழ்வுகளும் 20க்கும் மேற்பட்ட பிரீமியம் நிகழ்வு களும் இடம்பெறும். 60க்கும் மேற்பட்ட கிளப்கள், சாப்டர் கள் மற்றும் சங்கங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. நிகழ்வுகளில் தனி, குழு மற்றும் போட்டி முறையி லான இசை மற்றும் நடனப் போட்டிகள், சங்கங்கள் வழி யாக இலக்கிய மற்றும் விவாதப் போட்டிகள், மற்றும் விளையாட்டு போட்டிகள், நிலைத்தன்மை தீம்களுடன் ஃபேஷன் மற்றும் டிசைன் போட்டி கள், &nbsp;குறும்படப் போட்டிகள் பல்வேறு வகைகளில் நுண்கலை மற்றும் கைவினை பயிலரங்குகள் ஆகியவை இடம்பெற்றுள் ளன. விழா பிப்ரவரி 26 அன்று மாரத்தான் போட்டியுடன் தொடங்குகிறது. தொடக்க விழாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ், ரிவேரா &rsquo;26 &nbsp;இன் தொடக்க விழா விருந்தினராக பங்கேற்கி றார். பிப்ரவரி 26 (நாள் 1) அன்று பிரபல பின்னணி பாடகி சுனிதி சவுஹான் இசை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். பிப்ரவரி 27 (நாள் 2) அன்று இசையமைப்பாளர் எஸ்.தமன் இசை நிகழ்ச்சி இரவு 8.15 மணிக்கு நடைபெறும். &nbsp;பிப்ரவரி 28 (நாள் 3) அன்று பின்னணி பாடகர் பென்னி தயாள் இசை நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கும், பாடகர் பிரதீப் குமார் இசை நிகழ்ச்சி மாலை 6.45 மணிக்கும் நடை பெறும். மார்ச் 1 (நாள் 4) அன்று நிறைவு விழாவில் நடிகை ஜெனிலியா தேஷ் முக் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி மாலை 6.45 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து டிஜே ஷான் அவர்களின் டிஜே இசை நிகழ்வு இரவு 8 மணிக்கும், ரித்விஷ் ஆகியோரின் இசை நிகழ்வு இரவு 9.15 மணிக்கும் நடைபெற உள்ளது என்று கூறினார். இதில் விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநா தன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா &nbsp;பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், உதவி துணை &nbsp;தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.