முந்தய பக்கம்

விஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு:

16 Jul 2026, 10:21 pm
விஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு  ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு:
<p><strong>விஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு:</strong></p><p>வேலூர், ஜூலை 16- பெங்களூருவைச் சேர்ந்த ஜீரோ ஒய் நாட் நிறுவனம், விஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.45 கோடி நிதி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மாணவர்களின் புதுமை முயற்சி களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப வழி காட்டுதல் வழங்கும் நோக்கில், விஐடி பல்கலைக்கழகத்துடன் அந்நிறுவனம் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறு வனத்தின் நிர்வாகிகளான ஹர்ஷா வர்தன், சதீஷ் குமார், சைலேஷ் டொண்டுலா மற்றும் சிவகுமார் ஆகி யோர் விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதனிடம் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினர். தொழில்முனைவோராக விரும்பும் மாண வர்களுக்குப் பொருளாதாரத் தடையின்றி உதவிகள் வழங்கப்படும் என்றும், விஐடி மாணவர்களை வேலை வழங்குபவர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் இலக்கு என்றும் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதில் விஐடி துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram