விஐடி ‘ஸ்டார்ஸ்’ திட்டத்திற்கு ரூ.102 கோடி செலவு வேந்தர் கோ.விசுவநாதன் பெருமிதம்
25 May 2026, 2:28 am

விஐடி ‘ஸ்டார்ஸ்’ திட்டத்திற்கு ரூ.102 கோடி செலவு வேந்தர் கோ.விசுவநாதன் பெருமிதம்

வேலூர், மே 24- பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் விஐடி பல்கலைக் கழகத்தின் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்திற்கு இதுவரை ரூ.102 கோடி செலவிடப்பட் டுள்ளதாக அதன் வேந்தர் கோ.விசுவ நாதன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற ‘ஸ்டார்ஸ் தின’ விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய வேந்தர் கோ.விசுவநாதன், 2008-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் மூலம் இதுவரை 1,147 கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் நோர்டிக் நாடுகளை இந்தியா முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் இதுவரை கண்டிராத ஒரு நல்ல மாறுதலைத் தந்துள்ளதாகவும், புதிய அரசின் நட வடிக்கைகள் தமிழ்நாட்டை எல்லாவற் றிலும் முன்மாதிரியாக மாற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தின ராகப் பங்கேற்ற திருப்பூர் ராம்ராஜ் குழு மத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், வறுமையை ஒரு பாடமாகக் கொண்டு உழைக்க வேண்டும் என்றும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்க உள்நாட்டுத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தேனி தனி துணை ஆட்சிய ரும், இத்திட்டத்தின் முன்னாள் மாணவி யுமான ஜெ.கவிதா, இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் உழைத்தால் எத்துறையிலும் சாதிக்கலாம் எனப் பேசினார்.

இவ்விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசு வநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெய பாரதி, ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி மற்றும் மாணவர் நல இயக்குநர் நைஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.