விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
6 Feb 2026, 5:17 pm
<p><strong>விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பத்தூர், பிப்.6- விஐடி பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற ‘உழவர் சங்கமம்’ வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசினார். அவரது உரையில் பேசியதாவது, உலக அளவில் விளைநிலப் பரப்பள வில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், உற்பத்தித் திறனில் சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை விடப் பின்தங்கியுள்ளது. சீனாவில் விளையும் மகசூலில் பாதி அளவுதான் இந்தியாவில் கிடைக்கிறது. இதைச் சரிசெய்ய ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், 9 புதிய வாழை ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. மேலும், திருப்பத்தூரில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றார். சிறப்பம்சங்கள் விழாவில் பழங்களுக்கான புதிய உறையிடும் கருவி அறிமுகம் செய்யப் பட்டது, 145 அரங்குகள் கொண்ட கண்காட்சி யில் காய்கறிகளால் செதுக்கப்பட்ட மயில், மாட்டு வண்டி மற்றும் பறவைகளின் உரு வங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. நிகழ்வில் பேராசிரியர்கள் பால்மன்சிங் மற்றும் குன்ஜி பாலமுரளி மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்ட பழங்களுக்கான உறையிடும் கருவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கவுரவ விருந்தினர்களாக கொர மண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் துணைத் தலைவர் க. பூ. சீனிவாசன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு மாநில விற்பனை மேலாளர் ந.சுரேஷ் ஆகியோர் பேசினர். தொடர்ந்து வேளாண் கண்காட்சியை விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சி யில் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் கண்காட்சியில் கத்திரிக்காய், கேரட், மஞ்சள், பூசணியில் மயில் உரு வத்தில் 2 சிலைகளை தத்ரூபமாக வடி வமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதேபோல கருணைக்கிழங்கில் மாட்டு வண்டியும், கேரட் பூசணியில் வாத்து,கொக்கு ஆகிய பறவைகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. உழவர் சங்கமம் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகிறது. நிகழ்வில் விஐடி செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
